விழுப்புரம் : தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பாஜகவிற்கு பிரச்சார பீரங்கியாக செயல்படுவதாகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக உள்ள தமிழிசைக்கு கன்னியாகுமரியில் தேர்தலில் நின்று எப்படியாவது எம் பி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 


உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேச்சு  :


விழுப்புரம் சாலாமேட்டிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில்  கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திண்டுக்கல் லியோனின் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த பட்டிமன்றத்தில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டிமன்ற மேடையில் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஒன்றில் கலந்து கொள்ள திண்டுக்கல் லியோனி தனது மனைவியை அழைத்து சென்றபோது காரில் இருக்கை பற்றாக்குறை இருந்ததால் மனைவியை மடியில் அமர வைத்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.




ஆனால் இன்று திண்டுக்கல் லியோனி தான் மனைவியின் மடியில் அமர்ந்து செல்ல வேண்டுமென கூறியது நிகழ்ச்சியில் சிரிபலையை ஏற்படுத்தியது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தனது மனைவியோடு செல்லும் திண்டுக்கல் லியோனி போன்று தம்பதிகளாக வாழ வேண்டும் அமைச்சர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பாஜகவிற்கு பிரச்சார பீரங்கியாக செயல்படுவதாகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக உள்ள தமிழிசைக்கு கன்னியாகுமரிரியில் தேர்தலில் நின்று எப்படியாவது எம் பி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததாக தன்னிடமே தெரிவித்திருந்தாகவும், இதே போன்று தான் தமிழக ஆளுநருக்கு ஆசை இருக்கும் என தெரிவித்தார். ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணியை எந்நாளும் திமுக செய்து வருவதாக தெரிவித்தார். 


சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மேடை பேச்சு 


விவசாய தொழிலாளர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று எல்லோருக்கும் ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் பல்வேறு திட்டங்களை மறைந்த கலைஞர் கருணாநிதி செயல்பட்டுத்தி வந்தார். திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் ஸ்டாலின் மக்கள் பணிகளை செய்வதற்கும் திட்டங்களை நிறைவேற்ற முழு சதந்திரத்தினை அமைச்சர்களுக்கு வழங்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். நிதி நெருக்கடியால் ஆதிதிராவிட மக்களுக்கு கான்கிரிட் வீடுகள் கட்டி தரப்பட முடியவில்லை பெண்களுக்கான ஏராளமான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவில் இருக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தார்.