Presidential Election 2022: நோ சொன்ன கோபாலகிருஷ்ண காந்தி!! குடியரசுத் தலைவர் தேர்தலில் தடுமாறும் எதிர்க்கட்சிகள்!

குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிற்பதற்கு கோபாலகிருஷ்ண காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

கோபாலகிருஷ்ண காந்தி மறுப்பு:

Continues below advertisement

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட, மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். தன்னை விட சிறப்பு வாய்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு கோபாகிருஷ்ண காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

15வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல்:


இந்திய நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக பதவி வகித்து வரும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம், வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் 15வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜீலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவர் வேட்பாளரை நிறுத்துவதில் ஆளும் கட்சியான பாஜக தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. 

எதிர்க்கட்சிகளின் புதிய உக்தி:


இந்நிலையில் புதிய குடியரசுத் தலைவருக்கான வேட்பாளரை நிறுத்துவதில் எதிர்க்கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 15 ஆம் தேதி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. அப்போது அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் ஏற்ற வகையில் பொதுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

வேட்பாளரை நிறுத்த முடிவு?

அக்கூட்டத்தில்  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சரத் பவார் மறுத்துவிட்டார். அதையடுத்து தேசியவாத மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மாறும் கோபால கிருஷ்ண காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் கசிந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, பரூக் அப்துல்லா-வும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிற்பதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

கோபால கிருஷ்ண காந்தியும் மறுப்பு:

இந்நிலையில், இன்று காலை காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தியும் மறுப்பு தெரிவித்துள்ளது, எதிர்க்கட்சிகளுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வரவிருக்கும் 2022 குடியரசுத் தலைவரை தன்னிச்சையாக தேர்ந்தெடுக்கும் பெரும்பான்மையை ஆளும் பாஜக அரசு கொண்டிருக்கவில்லை.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola