பா.ஜ.கவுக்கு பாடம்புகட்ட நல்ல சந்தர்ப்பம் இது – நடிகை ரோகிணி

சட்டசபை தேர்தலில் பா.ஜ.கவுக்கு பாடம் புகட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும், அதை நழுவவிட்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் மார்க்சிஸ்டு சார்பில் எம்.சின்னதுரை போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக இன்று திரைப்பட நடிகை ரோகிணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ”தேசிய கல்விக் கொள்கை மாணவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்கும்” என்று கூறியுள்ளார்.

Continues below advertisement



”அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்காமல் இருந்தாலே பா.ஜ.க.வை எதிர்ப்பதாக இருக்கும். பா.ஜ.க.வுக்குப் பாடம்புகட்ட நல்ல சந்தர்ப்பம் நமக்கு வாய்த்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் நாம் பெரிய பாதிப்பைச் சந்திப்போம்” என்று பேசினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola