2015-16 ஆண்டு வீட்டுவசதிவாரியத்துறை அமைச்சராக இருந்த R. வைத்திலிங்கம் 28 கோடி ரூபாய் குறிப்பிட்ட ஒரு குழும நிறுவனத்திடம் லஞ்சமாக வாங்கி உள்ளதற்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகாராக அளித்துள்ளது. இதன் மீது உடனடியாக FIR பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்றும்  அந்த இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் என்று அழைக்கப்படும்  CMDAவில் ஒவ்வொரு திட்ட அனுமடிக்கும் லஞ்சம் கேட்கப்படுவது அனைவரும் அறிந்ததே. 2015-16ஆம் ஆண்டில் பெருங்களத்தூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக் 1453 வீடுகள் கொண்ட உயர்மட்ட கட்டுமானங்க்ள் திட்ட அனுமதிக்கு 2-12-2013 அன்று சிஎம்டிஏவில் விண்ணப்பம் செய்து இருந்தனர். 2 ஆண்டுகளுக்கு மேல் காலம் தாழ்த்தி 24-2-2016 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்ட அனுமதிக்காக தான் ரூ.27.9 கோடி முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் லஞ்சமாக பெற்றதாகவும் அதற்காக தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாரத் கோல் கெமிக்கல் பிரைவேட் லிட் எனும் நிறுவனம் மூலம் ரூ.27.9 கோடி பணத்தை Unsecured Loan என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் பிரபு நிறுவனமான முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிட் நிறுவனத்திற்கு 2015-16இல் கொடுக்கப்பட்டுள்ளது.


திட்ட அனுமதியும் அதற்கான லஞ்ச பணமும் ஒரே காலகட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. Metals and Chemicals Manufacturing நிறுவனமான Bharath coal Chemicals Ltd இன் பங்குகளை முழுவதுமாக வைத்திருப்பது அந்த தனியார் நிறுவனம்தான். 2015-16 இந்த நிறுவனத்தின் குழுவின் நிறுவனங்களில் தங்கள் செயல்பாடுகளின் மூலம் வந்த வருவாய் வெறும் ரூ.2.24 கோடி, ரூ 83 லட்சம் மற்றும் பூஜ்ஜிமாகும். அப்படி இருக்க  Bharath coal Chemicals Ltd இன் பங்குகளை வாங்க இந்த 3 நிறுவனங்களும் ஆளுக்கு 10 கோடி ரூபாய் கொடுத்ததாக Bharath coal Chemicals Ltdக்குள் பணம் கொண்டு வரப்படுகிறது. இந்த பணத்தை பயன்படுத்தி Bharath coal Chemicals Ltd ரூ 27.9 கோடி பணத்தை Unsecured Loan என்ற பெயரில் 2015-16ஆம் ஆண்டு வைத்திலிங்கத்தின் மகன் பிரபுவின் நிறுவனமான Muthammal Estates Pvt Ltdக்கு கொடுக்கிறார்கள். 


குறிப்பிடப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் பெரிய நிறுவனமா என்று பார்த்தால், அதன் Revenue Form Operation நிறுவனம் தொடங்கிய 2014ஆம் ஆண்டில் இருந்து வருமான வரியைல் தாக்கல் செய்த அனைத்து ஆண்டுகளிலும் பூஜ்ஜியமாக உள்ளது. அப்படி இருக்க எதன் அடிப்படையில், ஒரு பெரிய கெமிக்கல் மற்றும் மெடல் நிறுவனம் நியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தது. மேலும் பாரத் கோல் கெமிக்கல் லிட் 2019-20ஆம் ஆண்டு அந்நிறுவனம் வைத்திருந்த்த 280 கோடி கடனை திருப்பி கொடுக்க முடியாமல் Bankrptcy பதிவு செய்து சொத்துக்களை விற்று கடனை அடைக்க ஏற்பாடு செய்கிறார்கள். அப்போது கூட முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிட் இடம் இருந்து 27.9 கோடி பணத்தை திரும்ப பெறவில்லை. மாறாக இந்த பணத்தை பயன்படுத்தி அமைச்சர் வைத்திலிங்கம் மகன்பிரபு திருச்சி பாப்பகுறிச்சியில் 4.4 ஏக்கர் நிலத்தை 24 கோடி செலவில் வாங்கி உள்ளார். 11400 சதுர அடி சர்வே எண் 262/1 நிலத்தை 1.5 கோடிக்கு 2019ஆம் ஆண்டில் வாங்கி உள்ளார். இவை அணைத்தும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எப்படி ஒரு ப்ளான் அனுமதிக்கு Unsecured Loan என்ற பெயரிலே மகன் நிறுவனம் மூலமாக லஞ்சம் வாங்கி அவர் குடும்பத்திற்கு சொத்து சேர்க்க பயன்படுத்தி உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. 


முன்னாள் வீட்டு வசதி துறை அமைச்சர் வைத்திலிங்கம் ஒரு Plan Approval செய்ய 28 கோடி ரூபாய்  Unsecured Loan  ஆக என்ற பெயரில் வாங்கி உள்ளார் என்றால் அந்த காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து திட்ட அனுமதிகளுக்கும் எவ்வுளவு தொகை வாங்கப்பட்டது ? மற்றொருபுறம் ஒரு குழு இந்த வீடுகளை கடி முடிக்கும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு வீடும் சராசரியாக ஒரு கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரூபாய் கூட வருவாய் இல்லாத முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் பிரபுவின் Muthammal Estates Pvt Ltd நிறுவனத்திற்கு 27.9 கோடி Unsecured Loan ஆக Metals and Chemicals Manufacturing நிறுவனமான Bharath coal Chemicals Ltd மூலம் ஏன் கொடுத்தார்கள் என தனியார் நிறுவனத்தினர் விளக்குவார்களா?


இந்த பணம் திட்ட அனுமதிக்காக மட்டுமே கொடுக்கப்பட்ட லஞ்சமா? அல்லது கட்டுமானத்தினால் சட்டத்திற்கு புறம்பாக விதிமீறல் செய்யவும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்ய வேண்டும் என அறப்போர் இயக்கம் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.