திருச்சி ரங்கநாத சுவாமி கோயிலின் ஜீயரை நியமிக்க தமிழக அரசு முன்வந்ததற்கு முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெ.ச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.


நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது. இதில் அதிமுக 65 இடங்களை கைப்பற்றியது.


ராஜ்பவனில் கடந்த 7ஆம் தேதி எளிமையாக நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின்  பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டாலினை தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். 


துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளராக வெற்றி பெற்ற பி.கே.சேகர்பாபு தமிழக  இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர், பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து, தனது துறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், ஈஷா யோகா மையம் முறைகேடு செய்துள்ளதா என விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறியதாக சில தகவல்கள் வெளியானது.


இந்நிலையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் 51ஆவது பட்டத்திற்கு காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பிக்கக்கோரி அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்புக்கு  முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெ.ச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.




<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்துவிரோத அரசின் முதல் இந்து விரோதச் செயல். அரசே ஜீயரை நியமிக்க முனைவது மிகப் பெரிய அராஜகம். கார்டினல் ஆர்ச்பிஷப் பாதிரியாரை நியமிக்கும் துணிச்சல் இந்த இந்து விரோதிகளுக்கு வருமா? வீதிக்கு வந்து போராடுவது தவிர வேறு வழியில்லை போலும்.</p>&mdash; H Raja (@HRajaBJP) <a >May 10, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>



இதுகுறித்து ஹெ.ச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்துவிரோத அரசின் முதல் இந்து விரோதச் செயல். அரசே ஜீயரை நியமிக்க முனைவது மிகப் பெரிய அராஜகம். கார்டினல் ஆர்ச்பிஷப் பாதிரியாரை நியமிக்கும் துணிச்சல் இந்த இந்து விரோதிகளுக்கு வருமா? வீதிக்கு வந்து போராடுவது தவிர வேறு வழியில்லை போலும்' எனப் பதிவிட்டார்.


முன்னதாக, தமிழ்நாட்டில் 100 நாட்களுக்கு தான் திமுக அரசாங்கத்தை விமர்சிக்க போவது இல்லை என்று ஹெ.ச்.ராஜா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.