தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித்  இடைத்தேர்தலில் படிவம் ஏ.பி. ஆகியவற்றில் கையெழுத்து இடும் அதிகாரத்தை ஓபிஎஸ் இழந்து விட்டார் என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.


அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி இன்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், பொதுக்குழு தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பொதுக்குழு நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்த கூட்டத்தில் விவாதிக்கக் கூடிய விவரங்களை தலைவர்கள் புரிந்துகொண்டு விவாதிக்க வேண்டும். ஆனால் மாறாக ஓபிஎஸ் பொதுக்குழுவை கூட்டுவதை விரும்பாமல் ஒரு கற்பனையை ஏற்படுத்திக் கொண்டு ஒரு கடிதத்தை ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஆகியோர் எழுதி இணை ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்த கடிதத்தில் முன்னறிவிப்பு இன்றி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளதால் கழகத் தொண்டர்கள் கொந்தளித்து குழப்பத்தில் உள்ளனர். கட்சியின் நற்பெயர்க்கும் பிரச்னை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. கழகத் தொண்டர்கள் அமைதி காக்கும் மாறும் என எழுதியுள்ளார்.


 




 


ஒரு கட்சியின் தலைவராக உள்ள அவர் பொதுக் குழுவில் பங்கேற்று விவாதங்களை விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் பொதுக்குழு நடத்தக்கூடாது என நோக்கில் செயல்பட்டு ஒரு கட்சியின் தலைவரே கட்சியின் கட்டுப்பாடுகளை கொள்கைகளை மீறி நீதிமன்றத்திற்கு செல்கிறார். கட்சியின் விதிமுறைப்படி கட்டுப்பாட்டை மீறி நீதிமன்றம் சென்றால் அவரை கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பது விதி. அப்படிப்பட்ட நிலையில் ஓபிஎஸ்  அதிமுகவின் உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர் அங்கீகார கடிதத்தில் கையெழுத்திடும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார். ஒற்றை தலைமை வேண்டுமென அதிமுகவில் உள்ள தலைமை செயற்குழு உறுப்பினர்கள் 70 பேரும், மாவட்ட செயலாளர்கள் 70 பேரும், சட்டமன்ற உறுப்பினர்கள் 63 பேரும், 2580 பொதுக்குழு உறுப்பினர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி பெரும்பான்மையுடைய கருத்து ஒற்றை தலைமை வேண்டும் என்பது ஆகும். 


 




 


1999ம் ஆண்டு பென்னாகரம் பகுதியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஒரு நிகழ்ச்சியில் உதயசூரியன் சின்னம் முன்பாக நின்றதால் அவரை ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கி கடுமையாக எச்சரித்தார். அந்த தலைமை கீழ் இயங்கும் அதிமுக பல்வேறு பொறுப்புகளில் இருந்து முதலமைச்சராக இருந்த ஒபிஎஸ் ஆளுநர் மாளிகையில் திமுக முதலமைச்சருடன் தேனீர் அருந்துவதும் சட்டப்பேரவையில் பராசக்தி படம் கதை வைத்திருப்பதாகவும் ஓபிஎஸ் மகன் முதலமைச்சரை சந்தித்து ஆட்சி சிறப்பாக இருக்கிறது என சொல்லுவதை திமுக அமைச்சர் பொது மேடையில் பேசுகிறார். தமிழகத்தில் பலகட்சிகள் நாங்கள் தான் என பேசலாம் அது நடக்காது.  திமுக, அதிமுக மட்டுமே ஆட்சியில் இருக்கும். நாங்கள் பங்காளிகள் ஆனால் பகை எப்போது இருக்கும் இந்த பகைக்கு நீர்த்து போகும் வகையில் செயல்பட்டால் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஓபிஎஸ் அந்த வகையில் நீர்த்து போய் விட்டார். அவரை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சி நிர்வாகிகள் அண்மைக்காலமாகவே ஒற்றை தலைமை வேண்டும் ஒருவருக்கொருவர் பேசி வந்த நிலையில் அதற்கு ஒத்துழைப்பு தராததால் தான் தற்போது ஒற்றை தலைமைக்கான அவசியம் நேரிட்டது.


 




 


ஒற்றை தலைமையாக இருக்கும் திமுகவை எதிர்க்க அதிமுகவிற்கும் ஒற்றை தலைமை என்பது அவசியமாகிறது. ஓபிஎஸின் செயல்பாடு நம்பிக்கை இல்லாத வகையில் தான் இருக்கிறது. தற்போது ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகள் ஒற்றை தலைமையை முன்னிறுத்தி எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் எந்த ஒரு முடிவு எடுப்பதிலும் இரட்டை தலைமையால் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது என ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வருவது தர்ம சங்கடங்கள் ஏற்படுகிறது. திமுகவை கடுமையாக எதிர்க்க வேண்டிய நிலையில் ஓபிஎஸ்  செயல்பாடு ஒற்றை தலைமையை தற்போது வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த சூழ்நிலைக்கு  ஓ பன்னீர்செல்வம் காரணம் என தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண