மக்களவை தேர்தலில் பாஜக உள்ளடக்கிய என்.டி.ஏ கூட்டணியை எதிர்த்து வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் நோக்கில் காங்கிரஸ், திமுக உள்ளடக்கிய இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது. 


மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வருகிறது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியதிலிருந்தே, கட்சிகளுக்கு இடையே முரண்பாடு ஏற்படுவதை காண முடிந்தது. 


சில தினங்களுக்கு முன்பு, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து மம்தா பானர்ஜியும், மேற்கு வங்காளத்தில் தொகுதி பங்கீடு கிடையாது என்றும் தெரிவித்தார். சமீபத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜகவுடன் கூட்டணி வைத்து முதலமைச்சர் பதவியை தக்க வைத்து கொண்டார். 


இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃப்ரூக் அப்துல்லா செய்தியாளர்களை சந்திக்கையில், ஜம்மு காஷ்மீர் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக இன்று (பிப்.15) தெரிவித்தார்.





இது இந்தியா கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 


சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த  நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மூன்று மாநிலங்களிலும், காங்கிரஸ் தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் தெலுங்கானாவில் பெற்ற வெற்றது. இது இந்தியா கூட்டணிக்கு பெரும் சருக்கலாக அமைந்தது.


பாரதிய ஜனதா கட்சியின் பெற்ற வெற்றி, நாடாளுமன்ற தேர்தலில் எந்த விதத்திலும் பிரதிபலிக்காது. நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற இந்தியா கூட்டணி கூட்டணி தலைவர்கள் தெரிவித்து வந்தனர். யார் ஆட்சி அமைக்க கூடாது என்பதில் இந்தியா கூட்டணி மிகவும் தெளிவாக உள்ளது. நாங்கள் மிகுந்த ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். எங்கள் கூட்டணியுடைய ஒற்றுமை வெளிப்பாடு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியாக பிரதிபலிக்கும் என்றும் இந்திய கூட்டணி தலைவர்கள் தெரிவித்து வந்தனர்.


ஆனால் இந்திய கூட்டணியில் இருந்து, தொடர்ந்து விலகல் அதிகரிப்பது கூட்டணிக்கு பலவீனமாக அமைந்து வருவருகிறது. இனி வரும் காலத்தில் கூட்டணியை எப்படி பலப்படுத்த போகிறார்கள் என்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.