கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை ஆதரித்து கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பிரசாரம் மேற்கொண்டார். மலையாளம் மற்றும் தமிழில் வாக்கு சேகரித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ‛கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பா.ஜ.க.,வால் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அதே நேரத்தில் கேரளாவில் பா.ஜ.க.,-மார்க்சிஸ்ட் கட்சியினர் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறிய உம்மன் சாண்டி, அங்கு சமீபத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி பாலசங்கரின் பேச்சு அதை உறுதிபடுத்துவதாக குற்றம்சாட்டினார்.