கடந்த 2006 ஆம் ஆண்டு விகிபீடியா மாதிரி விகி லீக்ஸ் என்கிற ஒரு இணையதள பக்கம் உருவாகியது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இப்படியான ஒரு தளத்தில் இருந்து அமெரிக்காவின் மாபெரும் அரசியல் குறித்த ரகசியத் தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவல்கள் உலகம் முழுவது பெரிய அளவிலான அரசியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தின. யார் இந்த விகி லீக்ஸ் பக்கத்தை உருவாக்கியது.இந்த தகவல்களை யார் வெளியிட்டது? இந்த எல்லா கேள்விகளுக்கும் பதிலாக ஒரே பெயர்தான உச்சரிக்கப் பட்டது. ஜூலியன் அஸாஞ்சே. யார் இந்த ஜூலியன் அஸாஞ்சே. அவர் வெளியிட்ட தகவல்கள் யாரைப் பற்றியது.


விகி லீக்ஸ்:


ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த அஸாஞ்சே தனது இளமை பருவத்திலேயே ஒரு தேர்ந்த ஹேக்கராக இருந்தவர். தனது இந்தத் திறனால் அவர் மக்களுக்கு உண்மையைச் சொல்ல நினைத்தார்.  உலகம் முழுவதும் அந்தந்த அரசுகள் செய்த சூழ்ச்சிகள், கொலைகள், கொள்ளை, என யாரும் எதிர்பார்க்காத அத்தனை உண்மைகளை மக்களிடம் கொண்டு சென்றார் அஸாஞ்சே.


பொய் வழக்குகள்:


இந்தத் தகவல்களில் முதன்மையாக இருந்தது ஈராக் போரில் அமெரிக்கா எந்த மாதிரியான சூழ்ச்சிகளை கையாண்டது. ஈராக் போரின்போது பாக்தாதில் அமெரிக்கப் படை அப்பவி மக்களை சுட்டுத்தள்ளிய வீடியோ ஒன்றை 2010 ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்த நிகழ்விற்கு பிறகு அஸாஞ்சே மீது பல்வேறு தரப்பான  வழக்குகள் போடப்பட்டன. ஸ்வீடனில் பாலியல் பலாதகாரம் செய்ததாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அஸாஞ்சே  லண்டன் போலீசிடம் சரண் அடைந்தார்.


வெளியே சென்றால் நிச்சயமாக அமெரிக்காவிற்கு தான் நாடு கடத்தப்படுவோம் என்று தெரிந்து ஈக்வோடோரியன் எம்பஸியில் தஞ்சம் புகுந்தார் அஸாஞ்சே. கிட்டதட்ட ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார் அஸாஞ்சே. ஆனால் இதற்கு பின் பிரிட்டிஷ் அரசு அவரை கைது செய்தது. அரசின் தகவல்களை வெளியிட்டக் குற்றத்திற்காக அஸாஞ்சே மீது வழக்குப் போடப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளின் படி கிட்டதட்ட 175 ஆண்டுகள் அஸாஞ்சே சிறையில் கழிக்க வேண்டும். ஆனால் அஸாஞ்சே மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார். அவரை விடுவிக்கக் கோரி இன்று வரை போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.


விடுவிக்க கோரிக்கை:


இன்று வரை அஸாஞ்சே சிறையில் இருந்து வருகிறார். 2019 ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டனில் பெல்மார்ஷ் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அஸாஞ்சே அவரது உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருக்கின்றன.