நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் இன்று தவெகவில் இணைய உள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில், அவர் தவெகவில் இணையாதது பல சந்தேகங்களை எழுப்பியது. இந்நிலையில்தான்,  அவருக்கு திமுகவில் எம்பி சீட் வழங்க வாய்ப்பு தரப்பட உள்ளதாகவும், அதனால் அவர் திமுக பக்கம் சேர்வதற்கு முடிவு செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

நா.த.க கட்சியில் விலகல்:

 நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக விளங்கியவர் காளியம்மாள். அவருக்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் கட்சியை விலகுவார் என சமீப காலமாக பேச்சுகள் அடிப்பட்டு வந்தன. அதனை மெய்ப்பிக்கும் வகையில், சில நாட்களுக்கு முன்பு, நாம் தமிழர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார், காளியம்மாள்.

இந்நிலையில்தான், காளியம்மாள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன. இந்த தருணத்தில், சரியாக தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் அவர் நாதகவில் இருந்து விலகியது, இந்த கணிப்பை மேலும் வலுப்படுத்தியது. ஆனால், இன்று நடைபெற்ற விழாவில், அவர் தவெகவில் இணையவில்லை. இந்நிலையில், தற்போது காளியம்மாள் தவெகவில் இணையாதது ஏன் என்ற கேள்விகள் எழுந்தது.

Continues below advertisement

Also Read: Gold Visa: கோல்டன் விசாவை அறிவித்த டிரம்ப்.! அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெறலாம்..ஆனாலும் ட்விஸ்ட்

தவெக இல்லை, திமுக

இந்த சூழ்நிலையில்தான், தவெக சார்பில் காளியம்மாளிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், மேலும் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப் போவதாகவும், வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தை கைக்கூடி வரும் சமயத்தில், நடுவில் புகுந்த திமுகவைச் சேர்ந்தவரும் , முன்னாள் நாம் கட்சியைச் சேர்ந்தவருமானமான ராஜீவ் காந்தி புகுந்து,  அதனை தவிடுபொடியாக்கி காளியம்மாளை தூண்டில் போட்டு தூங்கிவிட்டதாக ரகசிய தகவல் வெளியாகி உள்ளது. 

நாம் தமிழர் கட்சியில் தனக்கான அங்கீகாரம் சரியாக கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்த காளியம்மாளுக்கு, ஆளும் கட்சியான திமுகவில் இருந்து எம்பி சீட் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தவெக, புதிய கட்சி என்பதால், அங்கு சென்றால் தனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயத்திலும், திமுகவில் தனக்கென அங்கீகாரம் கிடைத்தால், அது தனது நீண்டகால அரசியல் வளர்ச்சியாக இருக்கும் என கணக்கு போட்ட காளியம்மாள், தவெகவின் டீலை ஓரம்கட்டிவிட்டு திமுகவுக்கு ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், விரைவில் காளியம்மாள் திமுகவில் இணையலாம் எனவும் கூறப்படுகிறது.

Also Read: Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..