Erode East By Election 2023: ஈரோடு இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டி - வேட்பாளராக களமிறங்கும் ஆனந்த் யார்?

Erode East By Election 2023: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

Continues below advertisement

Erode East By Election 2023: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்தே களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் அறிவித்துள்ளார்.  

Continues below advertisement

இடைத்தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் அறிவிக்கப்படும் என ஏற்கனவே தேமுதிக பொருளாளர் பிரமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். தே.மு.தி.க. வேட்பாளராக ஆனந்த் களமிறங்குகிறார். 

இதற்கு முன்னதாக நடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொருளாளர் பிரேம லதா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 


தீர்மானம்:- 1

நடந்துமுடிந்த தேமுதிக உட்கட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்டம், மற்றும் கிளை கழக பொறுப்பாளர்களுக்கு இக்கூட்டத்தில் நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு, வெற்றிபெற்றவர்களுக்கு. பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம்: 2

மக்களின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்கின்ற நெய்வேலி அனல் மின் நிலையம் மற்றும் சேலம் இரும்பு உருக்கு ஆலைகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியினை தேமுதிக வன்மையாக கண்டிப்பதுடன், இம்முயற்சியை உடனடியாக கைவிட்டு பொதுமக்களின் கருத்துக்கேற்ப இப்போதைய நிலைமையே தொடர்ந்து நீடித்திட வேண்டும் என்று தேமுதிக வற்புறுத்துகிறது.


தீர்மானம்:- 3

பரந்தூர் விமான நிலைய விரிவாக்குதல் திருச்சி, கோவை, சேலம், விமான நிலைய விரிவாக்குதல் பணியினை பொதுமக்களின் முழுமையான வெளிப்படையான கருத்துக்களை கேட்டப்பின்பு அதற்கேற்றவாறு செயல்படுத்த நேமுதிக கேட்டுக்கொள்கிறது

தீர்மானம்:- 4

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.திருமகன் ஈவேரா அவர்களின் மறைவிற்கு மாமன்றம் வருத்தம் தெரிவிப்பதோடு, வருகின்ற இடைத்தேர்தலில் தேமுதிக தன்னிலையை நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் அவர்கள் முடிவெடுக்க முழு அதிகாரம் வழங்கி அவர் எடுக்கும் முடிவிற்கு இக்கூட்டம் முழுமனதாக சம்மதம் தெரிவித்துக்கொள்கிறது.


தீர்மானம்:- 5

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொடி நாளான பிப்ரவரி 12ம் நாள் தமிழகத்தின் அனைத்து கிளைகளிலும் புதிதாக கொடியேற்றி சிறப்பாக கொண்டாடிட மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் சிறப்பாக செய்திட இக்கூட்டம் உறுதிகொள்கிறது. போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

Continues below advertisement