ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
”அதிமுக அரணாக இருக்கும்”
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக மற்றும் விவசாயிகள் காரணமாகவே திமுக அரசு பொங்கலுக்கு கரும்பு வழங்கியது. திமுக ஆட்சியில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
அதிமுக அரசு சிறுபான்மையினரின் நலனுக்காக பலவற்றை செய்துள்ளது, மறைந்த அப்துல் கலாம் ஜனாதிபதியாக ஆவதற்கு அதிமுக ஆதரவு அளித்தது. மறைந்த அப்துல் கலாம் ஜனாதிபதியாக ஆவதற்கு நானும் ஓட்டு போட்டேன். எதிர்த்து ஓட்டு போட்டவர் யார் என்று தெரியுமா, இதற்கு முன்பு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிப்போம் என பரப்புரை மேற்கொண்டு சென்றாரே, அவர்தான். இதற்கு முன் முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும், அதிமுக அரணாக இருக்கும் என தெரிவித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.