பொதுக்குழு கூட்டம்:


இதனிடையே அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வந்த வண்ணம் இருந்தனர். பொதுக்குழுவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஸ்ரீவாரு மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  அதிமுக பொதுக்குழுவுக்கு மஞ்சள் வேட்டி வெள்ளை சட்டையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  வருகை தந்தார்.  ஆனால் தொண்டர்களின் கூட்டத்தில் சிக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அவர் ஒரு மணி நேரம் தாமதமாக வருகை தந்தார்.


கூட்டம்:


அதிமுக பொதுக்குழு இன்று நடைபெற்றது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் எதிர், எதிராக கோசங்கள் எழுப்பினர். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது இபிஎஸ் பேச ஆரம்பித்தார். அப்போது அவை தலைவர் தீர்மானங்கள் குறித்து இபிஎஸ் பேச ஆரம்பித்த போது, இபிஎஸ் ஆதரவாளர்கள் மாலை அணிவிக்க வந்தனர்.


Also Read: AIADMK Meeting Highlights: பரபரப்புக்கு பஞ்சமில்லாத அதிமுக பொதுக்குழு - 20 சுவாரஷ்ய தகவல்கள்!


கோபடைந்த இபிஎஸ்:


பேசும்போது மாலை அணிவிக்க வந்ததால், இபிஎஸ் கோபடைந்தார். அப்போது இருங்கங்கப்பா... இருங்கங்க...என்னங்க, போங்க....சும்மா....என கோபடைந்தார். இதனால் அணிவிக்க வந்த மாலையை இபிஎஸ் ஆதரவாளர்கள் மாலையை அணிவிக்காமல் கொண்டு சென்றனர். இதையடுத்து இபிஎஸ் பேச ஆரம்பித்தார்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண