இன்றையை பேரவை நிகழ்விற்கு பிறகு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டபேரவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய அவர்; அதிமுக - வில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. முதலமைச்சர் பேசும் போது எதிர்க்கட்சித் தலைவர் இரண்டு மணி நேரம் 52 நிமிடம் பேசினார். அதிமுக ஆட்சியில் எதிர்க் கட்சித் தலைவர் எவ்வளவு நேரம் பேசினாலும் தடை இல்லை , இடையூறும் செய்ததில்லை.


எதிர்க்கட்சி என்ற முறையில் பேரவையில் எங்களை பேச அனுமதிக்கவில்லை. எங்கள் ஆட்சியில் பிரச்சனை இல்லை. குற்றம் சொல்ல முடியவில்லை. நல்ல ஆட்சியை செய்தோம் நாங்கள் இரண்டு மணி நேரம் பேசியதை பெரிதாக பேசுகிறார்கள்.


ஆளும் கட்சி - எதிர்க்கட்சி சமமாக பார்க்க வேண்டும்


2 மணி நேரம் 52 நிமிடம் எதிர்க்கட்சித் தலைவர் பேசியதாக கூறுகிறார்கள். ஆனால் அதில் பாதி தான் நேரலையில் வந்துள்ளது. இதன் மூலமாக சட்டப்பேரவை தலைவர் ஒரு தலை பட்சமாக நடந்து கொள்வதற்கு இதுவே உதாரணம் எனவும் சட்டசபை தலைவர் இருக்கையில் அமர்ந்து விட்டால் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பாராமல் சமமாக நடந்து கொள்ள வேண்டும் அதை தான் நாங்கள் வலியுறுத்தினோம்.


தீர்மானம் கொண்டு வந்தால் தோல்வி என தெரிந்தும் ஏன் தீர்மானம் கொண்டு வந்தீர்கள் என்ற கேள்விக்கு ;


நாட்டு மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்,  நடுநிலையோடு இந்த வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த தீர்மானம் கொண்டு வந்தோம்.


திமுகவினர் தோழமைக் கட்சிகளுக்கு பேச நேரம் கொடுக்கவில்லை என சொல்கிறார்கள். வெளியே தான் தோழமைக் கட்சி ,  சட்டப்பேரவை உள்ளே ஆளும் கட்சி எதிர்க்கட்சி என இரண்டு தான்.


நாங்கள் சொன்னது எதையும் சபாநாயகரோ முதலமசை்சரோ மறுக்கவில்லை , எப்போதும் போல இதை திசை திருப்புவதற்காக உட்கட்சி பூசல் என பேசியிருக்கிறார். அவர் அப்படி பேசுவது எங்களுக்கு வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது. 


விஞ்ஞானம் முறைப்படி திமுக ஒரு சில விஷயங்களை கடைப்பிடிக்கும். மக்களை ஏமாற்றுவதற்காக நாடகம் போடுகிறார்கள். நான்கரை லட்சம் கோடி கடன் வாங்கிக் கொண்டு 93 சதவீதம் என பேசுகிறார்கள். 73 ஆண்டு காலம் இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தாலும் இந்த நான்கு அரை ஆண்டுகளில் இவ்வளவு கடன்களை திமுக வாங்கியுள்ளது. ஆனாலும் எந்த புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை.


மதுபான விற்பனையில் 35 சதவீதம் விற்பனையை ஏற்றி உள்ளீர்கள். பல வகையில் வருமானம் அதிகரித்து உள்ளது. கடனும் அதிகரித்து உள்ளது, புதிய திட்டங்கள் இல்லை, மூலதனம் இல்லை,  இதற்கு பதிலும் இல்லை.


டாஸ்மாக் முறைகேட்டை பற்றி அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து 40 ஆயிரம் கோடிக்கு மேலாக டாஸ்மாக்கில் ஊழல் நடந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. முழுமையெல்லாம் எங்களுக்கு தெரிந்த பிறகு தகவலை தெரிவிப்போம்.


உங்களுக்கு வந்தால் இரத்தம் , எங்களுக்கு வந்தால் தங்காளி சட்டினியா 


அதிமுகவில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த போது நாங்கள் டெண்டர் விடவில்லை அதிகாரிகள் டெண்டர் விடுவார்கள் இவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா ? நான் நிரபராதி என நீதிமன்றத்தால் நிரூபித்தேன் அதே போல அவர்களை நிரூபிக்க சொல்லுங்கள். அமலாக்க துறையை பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இவர்கள் கொடுத்தால் வழக்கு மற்றவர்கள் கொடுத்தால் பொய் எனவும் உங்களுக்கு வந்தால் ரத்தம் , எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என சிரித்து கொண்டே தெரிவித்தார். 


அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது இதற்கு விசாரிக்கவே 5 ஆண்டுகள் தேவைப்படும். எதைப் பற்றியும் பயமில்லை அதை எல்லாம் சொன்னால் தப்பித்து விடுவார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வழக்கு தொடர்ந்து அப்போது மக்கள் பார்த்துக் கொள்வார்கள் ஊடகங்கள் நீங்கள் கொஞ்சம் சப்போர்ட் ஆக இருங்கள் என சிரித்தவாரு தெரிவித்தார்.


ஓட்டு போட்ட மக்கள் ஓட்டு போடாத மக்கள் எனப் பிரித்து கொடுக்க முடியுமா யாருக்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் முடிவு எடுப்பார்கள் எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும் நான் முதல்வராகி விட்டேன் நீங்கள் அதிமுகவும் ஓட்டு போட்டு விட்டீர்கள் அதனால் உங்களுக்கு எதுவும் செய்ய மாட்டேன் என இருக்கக் கூடாது.  ஒரு லட்சம் வீடு திமுக அறிவித்துள்ளார்கள் அதையெல்லாம் திமுக காரர்களுக்கு மட்டும் அவர்கள் கொடுப்பார்கள். ஏழைக்கு நன்மை அளிக்கக்கூடிய திட்டங்களாக தான் அதிமுக இருக்கும்.


அதிமுக உடைப்பு - மூக்கு உடைந்து போகும்


செங்கோட்டையன் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது உங்களுக்கு மிகவும் அவசியமானதாக உள்ளதா என செய்தியாளர்களை பார்த்து கேள்வி எழுப்பினார். நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக தான் உள்ளோம் முதலமைச்சர் ஆனதிலிருந்து இந்த திட்டத்தை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதையெல்லாம் முறியடித்து கொண்டிருக்கிறேன் அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது,  முடக்க முடியாது அதை முயற்சி செய்பவர்களுக்கு மூக்கு உடைந்து போகும் என தெரிவித்தார்.