சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்தில் 9 மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.  இந்த, ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொள்ள வில்லை. 

  


16வது சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு பிறகு, அவர் தலைமையில் நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். இன்றைய கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் ராஜேஷ், வெங்கடேஷ்பாபு, பாலகங்கா, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சத்யா, அசோக் விருகை ரவி, ஆதிராஜாராம், கே.பி.கந்தன் ஆகியோரும் - முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மற்றும் பா.வளர்மதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தற்சமயம் சென்னையில் இருக்கும் ஒபிஎஸ் இந்த கூட்டத்தில் பங்கேற்வில்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அவர் பங்கேற்காமல், இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவரான இபிஎஸ் மட்டும் கூட்டத்தை நடத்தியுள்ளார். அரசு பங்களாவை இன்று காலி செய்து புதுவீடு புகும் நிகழ்வில் பங்கேற்று இருப்பதால் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை என காரணம் கூறப்பட்டாலும், அதுமட்டுமே காரணமாக இருக்குமா என்கிற கேள்விகள் எழுகின்றன. 


கிரகபிரவேசத்துடன் அரசியல் பிரவேசத்தை துவக்கும் சசிகலா! கெடு வைத்து கேம் ஸ்டார்ட்!


"கண்டிப்பாக கட்சியை சரி செய்துவிடலாம். சீக்கிரம் வந்துவிடுவேன்" என்று சசிகலா பேசிய ஆடியோ ஊடங்களில் பேசும் பொருளாகியது.



போயஸ்கார்டனில் புதிய வீடு கட்டும் சசிகலா, கிரகபிரவேசத்துடன் தன் அரசியல் பிரவேசத்தையும் அரங்கேற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகையை அரசியல் சூழ்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் நடைபெறும்  ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.   


 AIADMK Party Update : தனித்தனி அறிக்கை… ஒற்றை தலைமையை நோக்கி மீண்டும் நகர்கிறதா அதிமுக…?


முன்னதாக, கட்சியின் எதிர்க்கட்சியின் தலைவரை தேர்ந்தேடுப்பதில் ஒபிஎஸ் - ஈபிஎஸ் இடையே கடுமையான  போட்டித்தன்மை நிலவியது. கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டர். இதன்பின், தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியாக  அறிக்கை கொடுத்து வருகின்றனர்.   



ADMK statement | ”ஆசைக்கும், தேவைக்கும் கழகத்தைப் பயன்படுத்துவதற்கு சிறிதும் இடமில்லை” - அதிமுக அறிக்கை


ஆனால், இன்றைய கூட்டத்தில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்தும், அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், நகர்புற அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை எதிர்க்கொள்வது குறித்தும், 10 புதிய மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டன. 2021 சட்டமன்றத் தேர்தலில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை சந்தித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.       


  Sasikala | ‛சசிகலா விலகி இருந்ததால் ஜெ ஆத்மா சாந்தியடையும்’ -கே.பி.முனுசாமி பேட்டி  


கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, " வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவில் குழப்பை ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார். எனக்கும், கட்சி ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வத்துக்கும்  இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை"என்றும் தெரவித்தார்.