தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வரும் அவர் இன்று போடிநாயக்கனூரில் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருக்கிறார். போடி தொகுதியில் பன்னீர் செல்வத்தை எதிர்த்து திமுக சார்பாக தங்கச் செல்வன் போட்டியிடுகிறார். ஏற்கனேவே தமாகா தலைவர் ஜி.கே.வாசன் போன்ற தலைவர்கள் போடி தொகுதியில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பாக எடப்பாடி தொகுதியில் முதல்வரை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் பரப்புரையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இபிஎஸ் இன்று பிரசாரம்
ABP NADU | 27 Mar 2021 09:33 AM (IST)
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஒபிஎஸ்-யை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
ops_eps