சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் போலீஸ் அதிகாரியும் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைதுரை இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

Continues below advertisement

அதிமுகவில் இணைந்த வெள்ளதுரை

இது தொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில்: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டவரும், தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் S. வெள்ளைதுரை, Addl. Superintendent of Police (Retd.,) அவர்கள் நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: Chennai Rain: இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! சென்னைக்கு டேஞ்சர் அலர்ட்! முரசு புயல் குறித்து டெல்டா வெதர்மேன் பகீர்!

Continues below advertisement

யார் இந்த வெள்ளதுரை?

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்த வெள்ளைதுரை. இவர் கடந்த 1997ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் முதன்முதலில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் திருச்சிக்கு மாறுதலாகி பாலக்கரை காவல் நிலையத்தில் 1998 ஆம் ஆண்டு பணிபுரிந்த போது கோ.சி ஜான் என்ற ரவுடி போலீசாரை தாக்கி தப்ப முயன்ற போது துப்பாக்கியால் சுட்டு முதல் என்கவுண்டரை தொடங்கினார். அதன் பின் 2003 ஆம் ஆண்டு சென்னை அயோத்தி குப்பம் வீரமணி என்கவுண்டர், 2004 ம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பன் என்கவுண்டர் செய்த சிறப்பு அதிரடிப்படையில் இவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 12க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களை வெள்ளத்துரை நிகழ்த்தியுள்ளார்.

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா?

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்பட்ட ஏடிஎஸ்பி வெள்ளத்துரை கடந்த 2024ம் ஆண்டு பணி ஓய்வு பெறும் முந்தைய நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் இணைந்த முன்னாள் ஏடிஎஸ்பி வெள்ளைதுரை அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க உள்ளதாக இபிஎஸ் திட்டமிட்டுளளதாக தகவல் வெளியாகியுள்ளது.