நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் ஒவ்வொரு கட்சி தரப்பிலும் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.


 திமுக தேர்தல் அறிக்கை: 


அந்த வகையில் இந்தியக் கூட்டணியில் இருக்கும் திமுக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில்,



  • நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

  • மத்திய அரசு பணிகளில் தேர்வு, நேர்முக தேர்வு உள்ளிட்டவை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படும்.

  • மத்திய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.

  • சென்னையில்‌ உள்ளதுபோல்‌ இந்திய தொழில்நுட்பக்‌ கழகம்‌ மதுரையிலும்‌, இந்திய மேலாண்மைக்‌ கழகம்‌ கோவையிலும்‌ அமைக்கப்படும்‌.

  • 5000 இளம்‌ அறிவியல்‌ வல்லுநர்கள்‌, கண்டுபிடிப்பாளர்கள்‌ ஆகியோரை உருவாக்க சிறப்புத்‌ திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌.

  • இவைதவிர இந்தியா முழுவதும் உள்ள மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ.500 , பெட்ரோல் 75, டீசல் 65 ரூபாய்களாகக் குறைக்கப்படும்.

  • தாயகம் திரும்பிய இலங்கை தமிழருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும்.

  • ரயில்வேக்கு தனி பட்ஜெட் தாக்கல் செயய்யப்படும். * புதிய கல்விக்கொள்கை ரத்து செய்யபப்டும்.

  • நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உடனடியாக அமல், உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.


காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: 


அந்த வகையில் இன்றைய தினம் காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.



  • மாணவர்களின் அனைத்து கல்விக் கடன்களும் ரத்து செய்யப்படும்.

  • பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி மாற்றி அமைக்கப்பட்டு ஜிஎஸ்டி 2.0 ஆக மாற்றப்படும். 

  • ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டணச் சலுகை அளிக்கப்படும்.

  • விளையாட்டு வீரர்களுக்கு மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

  • தேசிய கல்விக் கொள்கை திருத்தி அமைக்கப்படும். 

  • 12ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்படும். 

  • கட்சி தாவினால் பதவி இழக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும். 

  • தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க புதிய சட்டம் இயற்றப்படும். 

  • உணவு, உடை, காதல், திருமணம், பயணம் ஆகிய தனிமனித சுதந்திரத்தில் தலையிட மாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.


இதில் முக்கியமாக பார்க்கப்போனால் இரண்டு கட்சிகளும் இந்தியக் கூட்டணியில் இருந்தாலும் தேர்தல் அறிக்கை மாறுபட்டு இருக்கிறது. வழக்கமாக மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சிகளிடமிருந்து மாநில அரசுகள், அந்தந்த மாநிலத்திற்கு தேவையான விஷயங்களை பெரும். அந்த வகையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.