அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று வானகரத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். துணை பொதுச்செயலாளராக கே.பி.முனுசாமி நியமிக்கப்பட்டுள்ளார். 


இந்நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அடுத்த 4 மாதங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை நடத்தும் அதிகாரிகளாக அமைப்பு செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 


 






முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசினார். அவர் முதல் 8 தீர்மானங்கள் குறித்து பேசினார். அதில், “உலகமே உற்று நோக்கும் வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அன்றைக்கு ராமன் முடிசூடும் போது அவருக்கு பக்க பலமாக லட்சுமணன் இருந்தார். ஆனால் இன்று எடப்பாடி ராமராக முடி சூடும் போது லட்சுமணன் இல்லை என்று கவலைப்பட தேவையில்லை. அவருக்கு பக்க பலமாக ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர்.


 






என்ன செய்வது கட்டபொம்மன் பிறந்த மண்ணில்தான் எட்டப்பனும் பிறக்கிறார். அப்படி இருக்கும் போது நம்முடைய எடப்பாடி பழனிசாமி அவர்கள் தன்னுடைய தலைமையில் அதிமுகவை வழி நடத்தி செல்வதை நாம் பார்க்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் சிறப்பு தீர்மானும் நிறைவேற்றப்பட்டது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண