சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி உட்பட்ட இருப்பாளி மற்றும் பக்கநாடு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, ஏழை, எளிய மக்கள் வாழ்க்கை ஏற்ற பெற பாடுபடுகின்ற கட்சி அதிமுக தான். குறிப்பாக துவக்கப் பள்ளி, நடுநிலை பள்ளி, மேல்நிலைப் பள்ளி என அதிகமான பள்ளிகளை உருவாக்கி அரசாங்கம் அதிமுக அரசாங்கம்தான். பள்ளியில் கல்வி கற்போர்கள் எண்ணிக்கை அதிமுக ஆட்சியில் தான் உயர்த்தப்பட்டது என பெருமிதம் தெரிவித்தார். கல்வி இருந்தால் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்ளலாம், கல்வி என்பது அழிக்க முடியாது செல்வம், சொத்து சேகரித்து வைத்தால் பாதுகாப்பது சிரமம், கல்வி கொடுத்தால் அது அழியாத செல்வம், அதனால் தான் அதிமுக ஆட்சியில் அதிகளவில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது எனவும் பேசினார்.
திமுக அரசாங்கம் வேண்டுமென்றே திட்டமிட்டு, அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட முதியோர் உதவித்தொகையை நிறுத்திவிட்டது. முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். மீண்டும் அதிமுக ஆட்சி மக்கள் ஆதரவுடன் அமைக்கப்படும், அப்போது நிறுத்தப்பட்ட பணிகள் நிறைவேற்றுவோம். ஏழை மக்கள் வயிற்றில் அடித்தால் அதற்கு தகுந்த பதிலடி மக்கள் திருப்பி கொடுப்பார்கள் என்றார். அம்மா இருசக்கர வாகனம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது எனவும் குற்றம்சாட்டினார்.
பின்னர் பக்கநாடு பகுதியில் பேசிய அவர், மேட்டூர் அணையில் இருந்து உபரிநீராக வெளியேறும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை, தடுப்பதற்காக அதிமுக அரசு முயற்சித்து 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் அது திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. மக்கள் ஆதரவுடன் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் அப்போது நீரேற்று திட்டத்தின் மூலம் ஏரிகளின் நிரப்பும் திட்டம் மீண்டும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது, ஆனால் மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை, அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தான். ஆனால் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது. மேலும் தனியார் பள்ளியில் கிடைக்கும் கல்வி தரத்தை விட அரசுப்பள்ளியில் கூடுதலாக கல்வித்தரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மடிக்கணினி திட்டம் கொண்டுவரப்பட்டது. அதை திமுக ஆட்சியில் நிறுத்திவிட்டது. கட்டுமான பொருட்கள் விலை அதிகரித்துவிட்டது. இனிமேல் மக்கள் வீடு கட்டமுடியாது, அனைத்தும் விலையும் ஏறிவிட்டது. இந்த விலை உயர்வுக்கு திமுக அரசு காரணம். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தங்கு தடையின்றி ரேஷன் கடைகள் கிடைத்தது. அனைத்தும் தற்பொழுது மாறிவிட்டது. தமிழகத்தில் கல்லூரி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகிய நிலையில் போதை பொருட்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது.
தமிழக முதல்வரிடம் கேட்டால் எங்கும் விற்பனை செய்யப்படவில்லை என்று கூறுகிறார். கள்ளச்சாராயம் அருந்தி 23 பேர் உயிரிழந்தனர். பின்னர் தமிழக முழுவதும் 1950 பேர் விற்பனை செய்தவர்கள் மீது வழக்குபதிவு செய்து, இதில் 1650 பேர் கைது செய்யப்படுகின்றனர். இதனால் எவ்வளவு பேர் பாதித்து உள்ளனர். இதை அரசு கண்டு கொள்ளவில்லை. தமிழகத்தில் சாராய விற்பனையில் அதிகம் திமுகவினர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் குற்றம்சாட்டினார்.