சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியது, "தமிழகத்திலேயே சேலம் மாநகர முதல்முறையாக அஸ்தம்பட்டி பகுதியை தேர்வு செய்து உள்ளேன். காலத்திற்கு ஏற்றவாறு தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும். இதன் நோக்கம் தலைமைக் கழகம் அறிவிக்கின்ற வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். முழு முயற்சியுடன் தேர்தல் கள பணியாற்றி வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தி.மு.க.வின் பச்சை பொய்:
ஒரு கட்டிடம் பலமாக இருக்க வேண்டாம் என்றால் அதன் அஸ்திவரம் வலுமையாக இருக்க வேண்டும், அதேபோன்று தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் பூத் கமிட்டி வலுமையாக இருக்க வேண்டும், வலிமையாக இருந்ததால் தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும். பூத் கமிட்டி தேர்தல் நேரத்தில் தேர்தல் நடக்கும் இடத்தில் பூத் ஏஜெண்டுகள் கண்காணித்து கள்ள ஓட்டு போடுவதை தடுக்க வேண்டும். மக்களை சந்தித்து அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும்.
அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறினால் நமது வேட்பாளர் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். திமுக ஆட்சியில் நடந்த அவலங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் 523 அறிக்கை தேர்தல் வாக்குறுதிகள் அறிவித்தார்கள் ஆனால் திமுக 95 சதவீதம் நிறைவேற்றபட்டு விட்டதாக பச்சை பொய்யை கூறி வருகிறார்.
இதனை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். என்னென்ன அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்கள், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத திட்டங்களை புள்ளி விவரங்களாக எடுத்து கூற வேண்டும். திமுக இரண்டாம் ஆட்சியில் 10 சதவீத வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றி உள்ளார்கள். கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை பேசி பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் தான் திமுக. இதனை மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என்று கூறினார்.
மேலும், கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமில்லாமல் கொடுக்காத நிறைய திட்டங்களை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதான் அதிமுகவின் சாதனைகள். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்கள் தற்பொழுது கைவிடப்பட்டுள்ளது. அதனை மக்களிடம் பக்குவமாக எடுத்துக் கூற வேண்டும். கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி கொடுக்காத திட்டங்களையும் நிறைவேற்றியதுதான் அதிமுக. இதுதான் அதிமுகவின் சாதனை.
தண்ணீர் பிரச்சினை வரும்:
அதிமுக ஆட்சியின் சாதனைக்கு அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்களே சாட்சி. திமுக ஆட்சியில் சேலத்தில் ஒரு திட்டங்களை கூட கொண்டுவரவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு திறந்து வைக்கிறது. நான் பெற்ற பிள்ளைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் வைக்கிறார். மேட்டூர் அணைக்கு 36 அடிக்கு தண்ணீர் குறைஞ்சி போச்சு; திமுக அரசுக்கு புது பிரச்சினை. இன்னும் 5 அடி தண்ணீர் குறைந்தால் சுமார் 24 மாவட்ட மக்களுக்கு குடிநீர் பிரச்சினை வரும். இது தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் தூங்கி கொண்டிருக்கிறார். இன்னும் 7 மாதங்களுக்கு இந்த அரசு எப்படி குடிநீர் விநியோகம் செய்யும்.
மன்னர் பரம்பரை:
தன் மகன் தனக்கு பின்னால் வரவேண்டும். தனது குடும்பம் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என ஸ்டாலின் மன்னர் பரம்பரை போல செயல்படுகிறார். தடையின்றி பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க அரசு திட்டமிட்டு செயல்பட வேண்டும். தமிழகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கஞ்சா போதைக்கு அடிமையாகி குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறுகிறது. இதை அனைத்தையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
0வாக்காளர்களின் அனைத்து வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் அதிமுகவிற்கு விழும்படி செயல்படுங்கள். இந்த தேர்தல் சவாலான தேர்தல் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் அதற்காகத்தான் கடினமான உழைப்பை வெளிப்படுத்தி அதற்கு துணை நிற்க வேண்டும் என்றார். இஸ்லாமிய மக்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீங்கள் எண்ணியபடியே அதிமுக செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.