தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மற்றும் கொங்கு நாடு தேசிய கட்சியில் இருந்து விலகி ஏராளமானோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


உள்ளூர்காரர்:


அப்போது பேசிய அவர், 2023 ஆம் ஆண்டு பிறக்க உள்ளது இந்த ஆண்டு மகிழ்ச்சிகரமாக இருப்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்றாக அமைந்துள்ளது. இது காலத்தில் அதிமுக எவராலும் வீழ்த்த முடியாது என்ற நிலை இந்த இணைப்பு ஒரு சான்றாக உள்ளது. தொண்டர்கள், அவர்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை எந்த நேரத்திலும் என்னை சந்தித்து கூறலாம். அதை செய்வதற்கு நான் தயாராக உள்ளேன். பகுதி மக்களுக்கு நன்மை செய்ய இந்த நேரமும் தயாராக உள்ளேன். உள்ளூரில் இருப்பவர்கள் மட்டும்தான் நேசம் கரம் நீட்டுவார்கள். வெளியூரில் இருப்பவர்களுக்கு எந்த கஷ்டமும் நஷ்டமும் தெரியாது என்றார்.



சேலம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அதிமுக ஆட்சியில் எப்படி இருந்தது அதற்கு முன்பாக எப்படி இருந்தது என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாகும். சேலம் மாவட்டத்தில் எத்தனை பிரச்சனை என்பது குறித்து நன்கு அறிந்தவன் நான். சேலம் மாவட்டம் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக மக்கள் திகழ்ந்து வருகிறது. மேம்பாலங்கள் அமைச்சரின் மூலமாக போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநகரமாக திகழ்ந்து வருகிறது. சேலம் மாவட்டம் மற்றும் மாணவரின் குடிநீர் பிரச்சனைகளுக்கு அதிமுக ஆட்சியில் தீர்வு கொடுக்கப்பட்டது. இந்தியாவிலேயே தார் சாலைகள் அதிகம் அமைக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது 


பசுமை வழிச்சாலை:


நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆக இருந்த போது அதிக தார் சாலையில் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளேன். நான் பெற்ற பிள்ளைகளுக்கு திமுக பெயர் வைத்து வருகிறது. எட்டு வழிச்சாலையை நாட்டின் வளர்ச்சி கொண்டு வரும் போது திமுக எதிர்த்தது, தற்போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வா.வேலு எட்டு வழிச்சாலை வேண்டும் என்று கூறுகிறார். மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்று கூறுவார்கள். நான் கொண்டு வந்தால் தவறு என்று கூறுகிறார்கள், அவர்கள் கொண்டு வந்தால் சரி என்று சொல்கிறார்கள். பத்தாயிரம் கோடி உலக தரத்துக்கு ஏற்றவாறு பசுமை வழிச்சாலை மத்திய அரசிடம் போராடி பெறப்பட்டது. இந்தியாவிலையே எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக, கையகப்படுத்தும் நிலத்திற்கு இவ்வளவு இழப்பீடு எந்த ஆட்சியிலும் கொடுக்க முன் வந்தது இல்லை என்று கூறினார்.


மரங்களும் தன்மை பொறுத்து இழப்பீடு அறிவிக்கப்பட்டது. ஒரு வீட்டின் மதிப்பிற்கு ஏற்றவாறு அதற்கான இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைத்தையும் எதிர்த்து தான். எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது, இதற்கு திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது தற்பொழுது ஜால்ரா அடிக்கிறார்கள். வேண்டுமென்றே விவசாயிகளை தூண்டிவிட்டனர். இந்த திட்டத்திற்கு 8 சதவீதம் விவசாய இருந்தால் போராட்டத்தில் ஈடுபட்டனர். 92 சதவீதம் விவசாயி நிலம் கொடுக்க தயாராக இருந்தனர். திமுக ஒரு திட்டத்தை கொண்டு வருவதற்கு வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்ப்பது, ஆட்சிக்கு வந்தவுடன் திட்டத்தை கொண்டு வர முயற்சிப்பது இதுதான் திமுக ஆட்சி, திராவிட மாடலா ஆட்சி. திமுக ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆகிறது 20 மாத ஆட்சியில் என்ன செய்துள்ளார்கள் என்று கேள்வி எழுப்பினர்.



முடக்கியது தி.மு.க.


ராணுவ தடவாளங்கள் அமைப்பதற்காக திட்டத்தை கொண்டு வந்தோம். இதன் மூலம் உள்ளூர் மக்கள் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். அதையும் திமுக ஆட்சியில் இதுவரை எதுவும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதை வேண்டுமென்று கிடப்பில் போட்டு விடுகிறார்கள். தமிழகத்திற்கு முன்மாதிரியான பஸ் போர்ட் திட்டம் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட இருந்தது. அதையும் செயல்படுத்தாமல் திமுக விட்டுவிட்டது.


அதிமுகவின் அனைத்து திட்டங்களையும் திமுக முடக்கிவிட்டது. பயிர் இழப்பீடுத் தொகை 13000 கோடி மத்திய அரசு இடமும் பெற்று கொடுத்தது அதிமுக ஆட்சியில் தான். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு பெற்றுக் கொடுத்ததாக வரலாறு இல்லை. தமிழக முதல்வர் ஊழல் செய்வதில் சூப்பர் முதலமைச்சர் என்று விமர்சித்தார். 


ராஜபரம்பரையா..?


தமிழக முதலமைச்சர் மகனுக்கு முடிசூட்டிவிட்டார், இவர்கள் ராஜபரம்பரையா என்று கேள்வி எழுப்பினர். கருணாநிதி குடும்பம் அன்றிலிருந்து இன்று வரை திட்டமிட்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அமைச்சர் கே.என்.நேரு உதயநிதி மட்டுமல்ல அவரது மகனுக்கும் வாழ்க என்று கூறுவோம் என்று பேசியதற்கு, அடிமைத்தனத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இது போன்ற அமைச்சர்கள் வைத்துவிட்டு மக்களுக்கு எவ்வாறு நன்மை செய்ய முடியும். கருணாநிதி குடும்பத்திற்கு மட்டுமே நன்மை கிடைக்கும் மக்களுக்கு நன்மை கிடைக்காது. பொங்கல் பரிசு தொகுப்பு அதிமுக ஆட்சியில் அனைத்தும் கொடுக்கப்பட்டது.


பொங்கல் பரிசுதொகுப்பில் செங்கரும்பு இடம்பெறும். அதை நம்பி விவசாயிகள் அதிக பயிரிடுவார்கள் ஆனால் திமுக ஆட்சி செங்கரும்பு சேர்க்கவில்லை. இதனால் விவசாயிகள் விளைவித்த கரும்புக்கு உரிய விலை கிடைக்காது விவசாயம் நஷ்டமடைவர்கள். கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகள் பயிரிட்ட செங்கரும்பை கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.