திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் அ.ம.மு.க. நிர்வாகி இல்ல துக்க நிகழ்ச்சிக்கு வருகை தந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியது, தமிழகத்தின் ராஜபக்சே (எடப்பாடி பழனிசாமி)  விரைவில் தொண்டர்களால் விரட்டியடிக்கப்படுவார். மேலும் வினை விதைத்தவன், துரோகம் செய்தவர்கள் தமிழகத்தில் ராஜபக்சே மாதிரி செயல்படுபவர்கள் கண்டிப்பாக வீழ்ச்சியை சந்திப்பார்கள் என்றார். மறைந்த புரட்சி தலைவி அம்மாவின் இயக்கத்தில் ஜாதி,  மத அரசியல் செய்து எல்லோரையும் தன் வசப்படுத்த எதை வேண்டுமானாலும் செய்ய பெரும் பொருட் செலவில் பிரமாண்ட செலவில் பொதுக்குழுவைக் கூட்டி தன்னை பொதுச் செயலாளராக அறிவித்துக் கொண்டு உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.  மேலும் புரட்சித் தலைவர் கண்ட இயக்கம், அம்மா வளர்த்த  இயக்கம் தற்பொழுது வீழ்ச்சி பாதையில் செல்கிறது.  இந்த தீயவர்களுடன் பயணிக்க கூடாது என்பதனால், நான்   அம்மாவின் கொள்கைகளையும், அம்மாவின் லட்சியங்களையும் காப்பாற்ற அந்த இயக்கத்தை மீட்டெடுக்க ஜனநாயக முறையில் வெற்றி பெற்று அக்கட்சியை மீட்டெடுப்போம் என்றார்.




இந்நிலையில் அதிமுகவின் பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்களை பொதுக்குழு உறுப்பினர்களை வசப்படுத்தி இருக்கிறார். தலைமை கழகம் சீல் வைத்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தலைமை கழகம் செல்ல ஓபிஎஸை அமைதியான வழியில் விட்டிருந்தால் இந்த பிரச்சனை நடந்திருக்காது என்றார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சேவாக உருவாக்கியுள்ளார். இலங்கையில் எப்படி ராஜபக்சே நாட்டை விட்டு ஓடினார். அதே போல தமிழகத்தில் கட்சியிலிருந்து விரட்டி அடிக்கப்படும் காலம் வரும் என தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக தற்பொழுது வீழ்ச்சி  பாதையை நோக்கி சென்று கொண்டுள்ளது. ஸ்லீப்பர் செல் கேள்வி குறித்த கேள்விக்கு பதில் கூறிய அவர், சின்னம்மா பெங்களூரில் இருந்து வரும்போது எப்படி தங்களது காரில் ஏற்றி வந்தார்களோ அதேபோல் மீண்டும் வரும் காலம் விரைவில் வரும் என்றார்.  சின்னம்மாவுடன் திவாகரன் இணைப்பு குறித்த கேள்விக்கு, சின்னம்மா சட்டரீதியாக போராட்டம் நடத்தி வருகிறார், அவருடன் பிரிந்தவர்கள் கட்சியை ரீதியாக இணைகிறார்கள். தொடர்ந்து பேசிய தினகரன் தமிழ்நாடு முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியான குறித்த கேள்விக்கு.. முதலமைச்சர் எதிர்க்கட்சியாக இருந்தாலும், அவர் நமது முதலமைச்சர் ஆகையால் அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்துள்ளேன் எனது தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண