எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையை `ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக பெரியார் ஈ.வே.ரா. சாலை என்ற பெயரில் உள்ள சாலையின் பெயரை, கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் சாலை என்று பெயர் மாற்றம் செய்து தேசிய நெடுஞ்சாலையில் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.


நெடுஞ்சாலைத்துறையின் இந்த செயலுக்கு மு.க.ஸ்டாலின், வைகோ  ஆகிய அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நெடுஞ்சாலைத்துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக  மீண்டும் பெரியார் பெயரையே இந்த சாலைக்கு சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


இந்த நிலையில், திராவிட விடுதலை கழகத்தினர் பெரியார் பெயரை நீக்கியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, புதியதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையின் பெயர் பலகையில் உள்ள `கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் சாலை' என்ற பெயரை மட்டும் கருப்பு மை வைத்து அழித்தனர்.