டாக்டர் மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. 


மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் கடந்த மே மாதம் அந்தக்கட்சியில் இருந்து விலகினார். அவர் விலகும்போது அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். இவரைத் தொடர்ந்து, அக்கட்சியில் பல முன்னணி நிர்வாகிகள் விலகினார்கள்.


இதனைத்தொடர்ந்து, மகேந்திரன் திமுகவில் இணைய உள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. ஆனால், அதை அவர் மறுத்தார். இந்நிலையில், டாக்டர் மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவருடைய ஆதரவாளர்கள் கோவை மாவட்டத்தில் இருந்து சுமார் 5000 பேருடன் திமுகவில் இணைய உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது.


Mahendran Interview : எத்தனை கோடிகளை பெற்றார் கமல்? கண்கலங்கிய மகேந்திரன்


இதுகுறித்து மகேந்திரன் நாளிதழ் ஒன்றுக்கு கூறுகையில், “தற்போது வரை, எந்த முடிவையும் நான் எடுக்கவில்லை. எனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து இம்மாத இறுதிக்குள் நிச்சயமாக ஒரு முடிவு எடுப்பேன். அப்போது ஊடகங்களை அழைத்து கண்டிப்பாக கூறுவேன்” என்று கூறியுள்ளார்.  இந்த கருத்தில் ஒரு விசயத்தை பார்க்க முடிகிறது. இல்லை என அவர் மறுக்கவில்லை. தற்போது முடிவு செய்யவில்லை என்கிறார். இம்மாத இறுதியில் முடிவெடுப்பேன் என்கிறார். இதுவும் ஒருவிதமான சந்தேக நிலையைையே ஏற்படுத்துகிறது. என்றாலும், இன்றைய இணைப்பு செய்தியை அவர் மறுத்துள்ளார். 


யார் இந்த மகேந்திரன்? எப்படி மநீம வந்தார்?


பொள்ளாச்சியைச் சேர்ந்த டாக்டர் மகேந்திரன், எம்பிபிஎஸ் படித்து முடித்து 30 ஆண்டுகள் மருத்துவ தொழில் செய்து வந்தவர். மேலும், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், விவசாயத்தின் மீது தனியாத ஆர்வம் கொண்டு பயிர்வகையை ஏற்றுமதி  செய்துவருகிறார்.  சமூகம் சார்ந்த பிரச்னைகளைக் களைவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட மகேந்திரன், தானாகவே முன்வந்து மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.  இவரின், ஆர்வமிக்க செயல்பாடுகளை கவனித்து வந்த கமல்ஹாசன், அவருக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவியை கொடுத்தார்.




அத்துடன் 2019 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் கொடுத்தார். அதற்கேற்றார்போல, அங்கு 1.44 லட்சம் வாக்குகள் பெற்று  அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதில், 28,634 வாக்குகள் சிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து கிடைத்தது. இதன்காரணமாக, 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் மகேந்திரன் போட்டியிட்டார். கோவை தொகுதியில் மகேந்திரன் பெற்ற வாக்குகளே, கோவை தெற்கில் கமல்ஹாசனை போட்டியிட வைத்தது. ஆனால், நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சியில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. கடைசி வரை வானதி சீனிவாசன் உடன் போராடிய கமல், 1,439 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தது.


மிகப்பெரிய தோல்விக்குப் பிறகும் கமலின் அணுகுமுறையில் மாற்றமில்லை எனக் கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகினார் அதன் துணைத் தலைவர் மகேந்திரன்.


Mahendran Political Profile: யார் இந்த மகேந்திரன்? மநீம வந்ததும், சென்றதும் எப்படி?