விழுப்புரம் : பாஜகவுடனான கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது எங்களுக்கு எந்த கவலையும் இல்லை எனவும் திமுகவுடான கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் 40 தொதிகளிலும் வெற்றி பெறும் எனவும் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக ஸ்டாலின் இருப்பார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 


விழுப்புரம் காக்குப்பத்திலுள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாணவர்களுக்கிடையேயான கலை போட்டியினை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, திமுக எம் எல் ஏக்கள் புகழேந்தி லட்சுமணன் ஆட்சியர் பழனி கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் சமூகநீதி குறித்து பேச்சாற்றலை வெளிபடுத்தினர். கலைபோட்டியினை தொடங்கி வைத்த பின் பாஜகவுடனான கூட்டணியிலிருந்து அதிமுக கூட்டணி வெளியேறியுள்ளது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி தமிழகத்தின் மக்களுக்கு தெளிவாக தெரியும் ஆகவே கூட்டணி பற்றி எங்களுக்கு கவலை இல்லை தமிழகத்தின் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.


தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாடும் நமதே நாற்பதும் நமதே என்று கூறியப்படி தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் கட்சிகள் இணைந்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக ஸ்டாலின் இருப்பார் என அமைச்சர் பொன்முடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி, கைப்பந்து, கால்பந்து, மல்லர் கம்பம் போட்டிகள் இன்று நடைபெற்றது. விளையாட்டு போட்டியினை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, திமுக எம் எல் ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், ஆட்சியர் பழனி கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். விளையாட்டு போட்டியில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளை சார்ந்த மாணவ மாணவிகள் திறமையை வெளிபடுத்தினர். அப்போது கபடி விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கல்லூரி மாணாவர்களோடு நானும் சேர்ந்து விளையாடுவேன் யாரும் என்னை அவுட் செய்ய கூடாது என கூறிகொண்டடே கல்லூரி மாணவ விளையாட்டு வீரர்களுடன் கபடி, கபடி என பாடியபடி கபடி விளையாடி மகிழ்ந்தார். விளையாட்டு போட்டி நிகழ்வினை தொடங்கி வைத்தபோது அமைச்சர் பொன்முடி கபடி விளையாடிய நிகழ்வு அனைவரின் மத்தியிலும் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியது.