Continues below advertisement

நெருங்கும் தேர்தல்- மாறும் அரசியல் கூட்டணி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வார காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அதிலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ள திமுக கூட்டணியில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மநீம உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டணி பலத்தோடு 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றியை பெற்றிடலாம் என திமுக திட்டம் தீட்டி வந்த நிலையில், திடீரென காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவில் இருந்து கூட்டணி ஆட்சி, கூடுதல் தொகுதி தொடர்பாக குரல் எழுந்தது. மேலும் திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் கட்சியான தவெகவிடமும் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.

காங்கிரஸ் திட்டம் என்ன.?

இதற்கு ஏற்ப ராகுல் காந்தியின் நண்பராக கருதப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்யை சந்தித்து பேசியிருந்தார். இதனையடுத்து தமிழக அரசை விமர்சித்து உத்தரபிரதேச ஆட்சியை புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க ராகுல்காந்தியிடமும் புகார் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் கூட்டணி ஆட்சி தொடர்பாக தொடர்ந்து கருத்துகளை கூறி வந்தார் தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வாக்கு சதவிகிதத்தை பட்டியலிட்டு கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாராலும் வெற்றி பெற முடியாது என தெரிவித்திருந்தார்.

Continues below advertisement

இதற்கு திமுக தரப்பில் இருந்து அக்கட்சி அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவிக்கையில், சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ராகுலும், ஸ்டாலினும் பேசி முடிவெடுத்துக்கொள்வார்கள் என கூறியிருந்தார். கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் முன்மொழியவில்லையெனவும் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஸ் கூட்டணி ஆட்சியை நான் மட்டுமல்ல காங்கிரஸ் தொண்டர்களும் எதிர்பார்ப்பதாக தெரிவித்த பதிவுகளை மாணிக்கம் தாகூர் வெளியிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில், மாணிக்கம் தாகூரை விமர்சித்து திமுகவினர் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

தனியா போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா.?

அதில், விருதுநகரில் தாகூருக்கு திமுக காரன் இறங்கி வேலை பாக்கலைனா ஜெயிச்சிருக்க முடியாது. விஜயகாந்த் பையன் ஜெயிச்சிட்டு போயிருப்பான்.தலைவர் ஸ்டாலின் சொன்னதால தான் மாணிக்கம் தாகூருக்காக இறங்கி வேலை பார்த்தோம் . உங்களை நம்பி உங்கள் கட்சியில எத்தனை பேர் ஓட்டு போட்டு இருப்பாங்க, விருதுநகர்ல மொத்தம் எத்தனை காங்கிரஸ் கட்சிக்காரன் இருக்கான்னு தெரியுமா..? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் திமுக தயவுல தானே விருதுநகர் எம்பியாக வந்தீங்க... Mp பதவியை ராஜினாமா பன்னிட்டு.... திரும்பவும் காங்கிரஸ் சார்பில் தனியா போட்டியிட்டு பலம் காட்டுங்க தலைவா.... என விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள்.