"திமுகவைப் பார்த்து தீய சக்தி என கூறியவர்கள் காணாமல் போனார்கள் என டி.ஆர்.பாலு பேட்டி அளித்தார்"
ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA)
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், இன்று மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் / திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் மற்றும் எழிலரசன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், உடன் இருந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
பொங்கல் இலவச வேட்டி சேலை
நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காந்தி பேசுகையில், ஜனவரி 5 அல்லது 6 தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் இலவச வேட்டி சேலை வழங்கப்படும்.
டிசம்பர் 15ஆம் தேதி அன்று அனைத்து குடும்ப அட்டைதாரருக்கு தேவையான இலவச வேஷ்டி, சேலைகளை வருவாய் துறை இடம் ஒப்படைக்கப்பட்டது, இது 20 ஆண்டுகளில் இதுதான் முதல் முறையாக டிசம்பர் மாதமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என காஞ்சிபுரத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பேட்டி அளித்தார்.
திமுகவை தீய சக்தி என்று சொன்னவர்கள் காணாமல் போய்விட்டார்கள்
இதன்பின் பேட்டி அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசுகையில், திமுகவைப் பார்த்து தீய சக்தி எனக் கூறியவர்கள் என்ன ஆனார்கள் என்று பாருங்கள், 3,4 பேர்கள் தீய சக்தி என்று சொன்னவர்கள் எங்கு போனார்கள் என்று பாருங்கள், இருக்கிற இடமே தெரியவில்லை, என ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தெரிவித்தார்.