திமுக- அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியலில் புதிய புதிய மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டு கூட்டணியை அமைத்து வருகிறது. ஆளுங்கட்சியான திமுக தங்களது கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மநீம,மமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. இதற்கு போட்டியாக பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கும் வகையில் பாஜக, பாமக, அமமுக, தமாகா ஆகிய கட்சிகளை சேர்த்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தென் மாவட்டங்கள் கை விட்ட நிலையில், கொங்கு மண்டலம் பெரிய அளவில் கை கொடுத்தது.
அன்புமணி- ராமதாஸ் மோதல்
எனவே இந்த முறை கொங்கு மண்டலத்தை மட்டுமல்ல வட மாவட்டங்களிலும் வெற்றி பெற அதிமுக திட்டமிட்டு வருகிறது. இதற்காக பாமகவை தங்கள் அணியில் மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். ஆனால் பாமகவில் உட்கட்சி மோதலால் இரு பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. அதில் அன்புமணி தலைமையி்லான பாமகவை தங்கள் அணியில் இணைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, அக்கட்சிக்கு 18 தொகுதிகளை ஒதுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் ராமதாஸ் - அன்புமணிக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தனி அணியாக தனது ஆதரவாளர்களை களம் இறக்க களம் இறங்க திட்டமிட்டுள்ளார் ராமதாஸ்.
அதில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை போட்டியிட வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வன்னியர்களின் வாக்குகள் பிரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே எடப்பாடியில் வன்னியர்களின் வாங்கு வங்கி அதிகம் உள்ள நிலையில் ராமதாஸ் - அன்புமணி என தனி தனி அணியாக போட்டி போடுவதால் வாக்குகள் சிதறும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக எடப்பாடி தொகுதியில் எடப்பபாடி பழனிசாமிக்கு சிக்கல் உருவாகியுள்ளது.
எடப்பாடியில் இபிஎஸ்க்கு செக் வைக்கும் திமுக, ராமதாஸ்
அடுத்ததாக எடப்பாடி தொகுதியில் வன்னியர்கள் வாக்குகளை குறிவைத்தும் திமுகவும் வேட்பாளர்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் பலம் வாய்ந்த வேட்பாளரை களம் இறக்கும் வகையில் தற்போது மக்களவை எம்.பியாக உள்ள செல்வகணபதியை வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டு வருகிறது. இதே போல சம்பத் என்பவரையும் எடப்பாடி தொகுதியில் களம் இறக்க திமுக ஆலோசித்து வருகிறது. எனவே வருகிற தேர்தலில் ராமதாஸ்-அன்புமணி தனித்தனியாக போட்டி போடுவதால் பாமக வாக்குகள் பிரிவதால் அதிமுகவிற்கு சிக்கல் உருவாகியுள்ளதாகவே கூறப்படுகிறது.
