விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, விருதுநகர் வடக்கு மாவட்டம், விருதுநகர் நகரத்தைச் சேர்ந்த ஜூனைத் அகமது கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவ்ப்பெயர் ஏற்படும் வகையிலம் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் - துரைமுருகன் உத்தரவு
ABP NADU | 22 Mar 2022 08:47 PM (IST)
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட விருதுநகர் மாவட்ட தி.மு.க.நிர்வாகியை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா அறிவாலயம்