மு.க.ஸ்டாலின் மருமகனும் ஐ-பேக் மாநில துணை செயலாளர் சபரீசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது அரியலூர் மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் 'நாங்கள் ஒன்றும் அதிமுககாரர்கள் இல்லை என்பதை மோடி முதலில் உணரவேண்டும். மிசாவை, எமர்ஜென்சியை பார்த்தவன் நான், நாங்கள் பனங்காட்டு நரி, இந்த ஐ.டி.ரெய்டு போன்ற சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சமாட்டேன் என்று கூறியுள்ளார்.

"தோல்வி பயத்தில் பாஜக நடத்தும் ரெய்டு போன்ற முறைதவறிய நடவடிக்கைகளால் திமுகவுக்கு மக்கள் ஆதரவு மேலும் பெருகும்"

- கழக அமைப்பு செயலாளர் திரு. @RSBharathiDMK MP அவர்கள் பேட்டி.#DMK #TNElection2021 pic.twitter.com/Hkgc2zmvjK
— DMK (@arivalayam) April 2, 2021

தோல்வி பயத்தில் பாஜக நடத்தும் ரெய்டு போன்ற முறைதவறிய நடவடிக்கைகளால் திமுகவுக்கு மக்களின் ஆதரவு மேலும் பெருகும் என்று திமுகவின் அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார். மேலும் 'தேர்தல் நேரத்தில் அரசியல் நோக்கத்தோடு வருமான வரித்துறை சோதனை நடத்தி பூச்சாண்டி காட்டினால், அதற்கு திமுக அஞ்சாது' என்று திமுக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

#பழிவாங்கல்: திமுக தலைவரின் மகள் வீட்டில் திடீரென வருமானவரித் துறையினர் சோதனை. இது பாஜக கூட்டணிக்குள்ள தோல்வி பயத்தின் விளைவு. திட்டமிட்ட பழிவாங்கும் போக்கு.

இத்தகைய அரசியல்ரீதியான அச்சுறுத்தல்களை பொதுமக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவர்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 2, 2021

மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் காட்சியின் தலைவர் தோல். திருமாவளவன் உள்ளிட்டோர் ஐ.டி ரெய்டுக்கு எதிராக தங்களுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.