சட்டம்-ஒழுங்கு பற்றி கவலைப்படாமல் நயன்தாரா எப்படி குழந்தை பெற்றுக் கொண்டார் என ஆராய்வதில் தான் திமுக அரசு உள்ளது என மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் கட்டமாக பேசினார். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த அகூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அபூர் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் ஏற்பாட்டில் பெருந்திரள் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது, இதற்கு சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் கலந்துகொண்டு மரம் நடும் விழாவை துவக்கி வைத்தார், இதில் 500 நபர்கள் ஒரே நேரத்தில் 500 மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தனர்.
மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் கூறியதாவது:-
திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பலமுறை கூறியுள்ளோம் செயல்படாத அரசு என்றும் திறமையற்ற அரசு என்றும் சட்ட ஒழுங்கு சுத்தமாக சீர்கெட்டு உள்ளது எனவும் பலமுறை கூறி வருகிறோம் அதற்கு எடுத்துக்காட்டாக கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழக முதலமைச்சர் மௌனம் காத்து வருகிறார், குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பேசுவதற்கு தயங்குகிறார், திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தீவிரவாதம் தலை தூக்கி வருகிறது.
இதற்கு கோவை வெடிகுண்டு சம்பவம் என்பது ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும் ஆனால் அதைப் பற்றி சிந்திக்காமல் மக்களுடைய அச்சத்தை போக்காமல் இந்த அரசு முன்னுக்கு முரணான பதில்களை கூறி வருகிறது இதை வைத்து அரசியல் செய்து வருகிறது. கோவை வெடிகுண்டு குறித்த அச்சத்தை மக்களிடம் இருந்து போக்குவதை தவிர்த்து அதிதீவிரமாக நயன்தாரா சட்டத்திற்கு உட்பட்டு குழந்தை பெற்றுக் கொண்டாரா என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.