பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணா சிலையின் முன்பாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுகவின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்‌ எஸ். கிருஷ்ணமூர்த்தி, அமைப்புசாரா மாநில அணி செயலாளர் கமலக்கண்ணன், அதிமுக கட்சியின் பேச்சாளர் நடிகை விந்தியா ஆகியோர் பங்கேற்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே 7.5 சதவித இட ஒதுக்கீடு கொண்டு வந்த தமிழகத்தில் ஆண்டுதோறும் 555 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான இட ஒதுக்கீட்டை கொண்டு வந்த அரசு அதிமுக அரசு என்றும், அம்மா மினி கிளினிக், அம்மா உணவகங்கள், தாலிக்கு தங்கம், பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி உள்ளிட்ட பல அதிமுக கொண்டு வந்த பல திட்டங்களை தற்போதைய திமுக அரசு கைவிட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.


 




 


மேலும், தற்போதைய திமுக அரசில் நான்கு முதல்வர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்றும், துணை முதலமைச்சராக ஸ்டாலினின் மனைவி வருவதற்கான ஏற்பாடுகளை நடத்தி வருகிறார்கள் என்றும், ஆளும் திமுக அரசு கலெக்சன், கரப்ஷன், கமிஷன் என்ற மூன்று சி ஆட்சியை நடத்தி வருவதாகவும், ஆளும் திமுக அரசு செய்து வரும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பட்டியலை இபிஎஸ் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு அளித்துள்ளதாகவும் கூடிய விரைவில் திமுக அரசு கலைக்கப்படும் என்றும் பேசினார். மேலும்,  இந்துக்களைப் பற்றி பாராளுமன்ற உறுப்பினர் அ. ராசா அவர்கள் மிகவும் இழிவாக பேசி உள்ளதாகவும், இத்தகைய ராசாவின் பதிவுகளுக்கு ஆளும் திமுக அரசின் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் திமுகவினருக்கு பொருந்துமா என்றும் என்னுடைய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் தான் பதில் அளிக்க வேண்டும் என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி காட்டமாக பேசினார்.


 




 


இதனைத் தொடர்ந்து கழகப் பேச்சாளர் நடிகை விந்தியா பேசுகையில்;


பொதுமக்களுக்கு கடந்த அதிமுக அரசின் பத்து வருட சாதனைகளை விட கடந்த ஒன்றை வருட திமுக அரசு தமிழக மக்களுக்கு பல சோதனைகளை அளித்துள்ளது. திமுக எதிர்ப்பு என்பது ஒவ்வொரு அதிமுகவின் தொண்டர்களிடையே ரத்தத்தில் ஊதியது. கொள்ளையடிப்பதற்காகவே ஸ்டாலின் குடும்பம் அவர்கள் திமுகவை நடத்தி வருவதாகவும் என்றும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் ஆழ்வார்பேட்டை வீடு வரை வளர்ந்துள்ளார் என்றும், அவர் போட்டியிட்ட சட்டமன்ற தொகுதி தண்டராம்பட்டு மற்றும் திருவண்ணாமலை வளரவில்லை என்றும் இந்தியா அவர்கள் குற்றம் சாட்டினார். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியை தந்த இடத்தில் வேலு அவர்கள் ஸ்டாலின் அவர்கள் குடும்பத்திற்கு உதவி செய்யும் விதமாக நடந்து கொள்கிறார் என்றும், விடியா அரசில் அதிகமாக விடிந்தது பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுக்கு மட்டுமே என்று குற்றம் சாட்டியவர், திமுக அரசு கருணாநிதி குடும்பத்துக்கு போகும் என்று தெரிந்திருந்தால் அண்ணா அவர்கள் திமுகவை கலைத்திருப்பார் என்றும்


 




 


என் இதயத்தில் விழுந்த கனி எம்ஜிஆர் என்று பாராட்டியவர் பேரறிஞர் அண்ணா என்றும் அண்ணா அவர்கள் மதித்தது எம்ஜிஆர் அவர்களை தான் என்றும், கருணாநிதி முதல்வர் ஆனது உடனே கருணாநிதி அவர்கள் அண்ணாவை விட்டு விட்டு கஜானாவை கெட்டியாக பிடித்துக் கொண்டவர் கருணாநிதி என்றும், ஆனால் எம்ஜிஆர் அவர்கள் அண்ணாதுரையின் கொள்கையைப் கடைப்பிடித்தார் என்றும், பதவிகள் மற்றும் பணம் போதும் என்ற கருணாநிதியை எம்ஜிஆரின் தொடர்ந்து தோற்கடித்து கொண்டே இருந்தார் என்றும் அண்ணாவின் கொள்கை போதும் என்று நினைத்த எம் ஜி ஆர் அவர்கள் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருந்தார்கள் என்றும், விடியல் அரசை தருவோம் என்று சொன்ன திமுக அரசு தற்போது தெரு விளக்குகளுக்கும் விடியல் தராமல் உள்ளதாகவும்,


 




 


பவர் ஸ்டார் என்று கூறிக்கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உண்மையிலேயே பவர் கட் ஸ்டாலின் என்றுதான் மக்கள் நினைத்து வருவதாகவும் விந்தியா குற்றம் சாட்டினார்.திமுக ஆட்சியில் கரண்ட் பில்லை பார்த்தாலே ஷாக் அடிக்கும் ஆட்சியாக உள்ளதாகவும் கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் உயரவில்லை என்றும் ஆனால் தற்போதைய திமுக அரசு மின் கட்டணத்தை பொதுமக்கள் பாதிக்கும் வகையில் உயர்த்தி உள்ளதாகவும் குற்றம் சாட்டிய விந்தியா அவர்கள் கருணாநிதி பேச்சும் சரி செயலும் சரி தண்ணீரில் தான் எழுதி வைக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஸ்டாலின் அவர்கள் கடலில் அவருக்கு பேனா சிலை அமைக்க உள்ளதாகவும் விந்தியா அவர்கள் பேசினார்.