சட்டசபை தேர்தலுக்கான திருமங்கலம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக மணிமாறன் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், மணிமாறனின் சகோதரரான அறிவழகன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் இன்று இணைந்துள்ளார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் அறிவழகன் அ.தி.மு.க.வில் இணைந்தார். வாக்குப்பதிவிற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், தி.மு.க. வேட்பாளர் சகோதரர் அ.தி.மு.க.வில் இணைந்தது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வில் திடீரென இணைந்த தி.மு.க. வேட்பாளர் சகோதரர்
ABP Tamil | 20 Mar 2021 11:51 AM (IST)
திருமங்கலம் தி.மு.க. வேட்பாளர் சகோதரர் திடீரென அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். இது தி.மு.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
dmk_symbol