நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் திருநங்கைகளுக்கு போட்டியிட வாய்ப்பளித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் வருகிற 19 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சியினரும் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர் பட்டியல்களை அறிவித்த வண்ணம் உள்ளனர்.


நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் இந்த முறை திருநங்கைகள், இளம் தலைமுறையினருக்கு சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை வாய்ப்பு கொடுத்து வருகிறது. குறிப்பாக திருநங்கைகளுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


நாம் தமிழர் கட்சி சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் திருநங்கைகளுக்கு போட்டியிட வாய்ப்பளித்தது. தற்போது, திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வரவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது.


அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 37ஆவது வார்டில் திமுக சார்பில் 49 வயது திருநங்கை கங்கா போட்டியிடுகிறார். இதேபோல், சென்னை மாநகராட்சியில் தேனாம்பேட்டை மண்டலத்தில் அதிமுக சார்பாக திருநங்கை ஜெயதேவி போட்டியிடுகிறார். அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் இருந்து அடிப்படை உறுப்பினராக இருந்த ஜெயதேவிக்கு தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 திமுக, அதிமுகவை தொடர்ந்து பாஜக சார்பிலும் திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட 76ஆவது வார்டில் பாஜக சார்பில் திருநங்கை ராஜம்மா போட்டியிடுகிறார். வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக அவர் கூறினார்.


தேர்தல் அட்டவணை


வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள் - ஜனவரி  28 (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) 


வேட்புமனு தாக்கல் இறுதி நாள் - பிப்ரவரி 4 


 வேட்பு மனுக்கள் பரிசீலனை - பிப்ரவரி 5 


வேட்பு மனு திரும்ப பெருவதற்கான கடைசி தேதி - பிப்ரவரி 7


வாக்கு பதிவு நடைபெறும் தேதி - பிப்ரவரி 19 


வாக்கு பதிவு நேரம் - காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 


வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் - பிப்ரவரி 22 


தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும் நாள் - பிப்ரவரி 24


தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு நாள் - மார்ச் 2


துணை மேயர், மேயர் பதவிகளுக்கு தேர்தல் - மார்ச் 4ஆம் தேதி 


தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுடைய பதவி காலம் முடிவடைந்தும் நீண்ட காலம் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த சூழலில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த 2021ஆம் வருடம் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண