அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயரை வைப்பதற்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி எதிர்ப்புத் தெரிவித்தாக சமூக வலைத்தளங்களில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கடும் கண்டங்களைப் பதிவிட்டுவருகின்றனர்.


அனைத்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில், அக்கட்சியின் சார்பில் கொண்டாடங்கள் கலைக்கட்டத்துவங்கியுள்ளது. இந்த பொன்விழாவை ஓராண்டிற்கு எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் என்பது குறித்து கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் என்னென்ன நிகழ்வுகள் எல்லாம் கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் தான், எம்.ஜி.ஆர் என்பவரால் தொடங்கப்பட்ட அதிமுக தற்போது ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. மேலும் ராயப்பேட்டையில் கட்சி அலுவலகம் தொடங்க இடம் கொடுத்தார். இதனால் தான் தற்போது தலைநிமிர்ந்து இந்த அலுவலகம் நிற்கிறத. எனவே இந்த விழா ஆண்டின் அதனை நினைவு கூர்வதுடன், இந்த வள்ளலின் நினைவைப்போற்றும் விதமாக கட்சி அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.





இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதையடுத்து தான், தற்போது பிரச்சனைகள் பூதாகரமாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிவருகிறது. இக்கூட்டத்தின் போது, எம்.ஜி. ஆருக்குப்பின்னர் அவருடைய மனைவி ஜானகி தான், கட்சிக்கென்று இவ்வளவு பெரிய கட்டிடத்தைக்கொடுத்தார் என்றார் ஜே.டி.பிரபாகர். அப்போது தான் முன்னாள் அமைச்சர் வளர்மதி, நீங்கள் தெரிவிக்கும் இந்தசெய்திக்கு உயில் ஏதும் இருக்கிறதா? எனக் கேட்டவுடனே கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.  வளர்மதிக்கு அதிமுக கட்சி அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயரைச்சூட்டுவதில் உடன்பாடு இல்லையா? என்று கேள்வி எழுப்பியதோடு கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. இதனையடுத்து அனைத்து மூத்த நிர்வாகிகளின் ஒருமித்த கருத்தினையடுத்து எம்.ஜி.ஆர் பெயரை கட்சி அலுவலகத்திற்கு சூட்ட முடிவெடுக்கப்பட்டது.


ஆனால் இதற்கடுத்தாற்போல் இச்செய்தி வெளியில் வரத்தொடங்கியதுமே, எம்.ஜி.ஆர் தொண்டர்கள் கடும் கோபமடைந்தனர். இதோடு மட்டுமின்றி வளர்மதிக்கு போன் செய்ததோடு, அவரை கடுமையாக திட்டியுள்ளனர். மேலும் எம்.ஜி. ஆரின் தீவிர தொண்டரும், குடிசை மாற்று வாரிய முன்னாள் தலைவருமான ஓம்பொடி பிரகாஷ் சிங், வளர்மதிக்கு போன் போட்டு கடுமையாக விமர்சித்ததோடு, அதனைப் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவிட்டார். பின்னர் சொல்லவா வேண்டும், எம்.ஜி.ஆரின் ரசிகர்களான அதிமுகவின் தொண்டர்கள் சோசியல் மீடியாவில் கொந்தளித்துவருகின்றனர். மேலும் இதுக்குறித்து பேசிய ஓம் பொடி பிரகாஷ் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது தான் அதிமுக. அவரால் தான் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது. இந்நிலையில் எம்.ஜி.ஆரின் புகழுக்கே குறுக்கே நிற்கும் கட்சிக்கார பெண்மணியை விடவேக்கூடாது என முடிவெடுத்து தான், எம்.ஜி.ஆர் விரோத பேச்சுக்குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டுவருவதாகவும், என்னுடைய இந்த முயற்சிக்கு உண்மையான எம்.ஜி.ஆர் தொண்டர்கள் என்னைப்பாராட்டிருவதாகத் தெரிவித்தார்.





இந்நிலையில் தான், இப்பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வளர்மதி கருத்து தெரிவித்துள்ளார். அதில் கட்சியின் தலைமைக்கட்டிடம் குறித்து ஜே.சி.டி பிரபாகர் கூறுகையில், ஜானகி தான் கட்சிக்காக இடம் கொடுத்ததாக கூறினார். இக்கருத்திற்கு இடைமறுத்து தான், எங்கே உயில் ஏதும் எழுதி வைத்திருந்தால் காட்டுங்கள், அதைப்பார்த்து தெளிவு பெறலாம் என தெரிவித்தேன். ஆனால் இதனைத் தவறாக புரிந்துக்கொண்டு நான் எம்.ஜி.ஆருக்கு விரோதமாக பேசுகிறேன் என்று எம்.ஜி.ஆர் விசுவாசிகள் எனக்கூறி என்னை பலர் மிரட்டுகின்றனர்.


ஆனால் நான் அப்படி எதுவும் சொல்லவில்லை. “ கடந்த 1973 ஆண்டு கட்சியின் திருவான்மியூரில் நடந்த கட்சி மாநாட்டில் என்னை அழைத்து பேச வைத்து அழகுப்பார்த்தவர் எம்.ஜி. ஆர் என்றும் அதன் பின்பே வளர்மதியை ஊர் உலகம் அறியும் என தெரிவித்தார். மேலும் என் குழந்தைகளுக்கு  பெயர் சூட்டியவரும் எம்.ஜி.ஆர் தான் அவரால் தான் நான் எம்.எல்.ஏ ஆனேன் என்றும் அவருக்கு எதிராக இருக்க வேண்டும் என்று கனவில் கூட நினைக்க மாட்டேன் என்றார். மேலும் மூத்த மகன் முத்தழகன் உடல் பாதிக்கப்பட்ட போது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்து, உயிரைக் காப்பாற்றியவர் எம்.ஜி.ஆர்., தான். இப்படி எத்தனையோ விஷயங்களில் எனக்கு உதவியாக இருந்தவருக்கு நான் ஒருபோதும் துரோகம் நினைக்க மாட்டேன் என்றார்.