காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது.  இதில் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சின்னம் இல்லாமல் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட தேர்தல் நடத்தப்படுகிறது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெற உள்ளது.



 

காஞ்சிபுரம் 

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2321 பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் வாலாஜாபாத் என 5 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஊராட்சி  ஒன்றிய வார்டு உறுப்பினர் - 98. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 11 உள்ளிட பதிவுகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஒன்றியங்களில் அக்டோபர் 6-ஆம் தேதி அன்று முதற்கட்ட தேர்தல், ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் ஆகிய இரண்டு ஒன்றியங்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

 

செங்கல்பட்டு

 

இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில்   உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு  முதற்காட்டமாக உட்பட்ட 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 74 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 160 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 1230 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது.

 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 80 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும் 199 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 1449 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் அடுத்த மாதம் 9-ந்தேதி நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு கடந்த 15-ந்தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 22-ந்தேதி கடைசி நாள் ஆகும். 

 

இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளை தவிர பிற வார்டுகளுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது . அதனடிப்படையில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட விபரம்:

 

 

காஞ்சிபுரம் 

 

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 11 . அதிமுக 11 வார்டுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.. கூட்டணிக் கட்சிக்கு பாய் பாய்.

 

காஞ்சிபுரம் ஒன்றியதில் 18 வார்டுகள் உள்ளன  அதிமுக அறிவித்திருப்பது 13. மீதமுள்ள ஐந்து வார்டுகள்  கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு.

 

வாலாஜாபாத் ஒன்றியத்தில்  வார்டு உறுப்பினர்கள் 21 உள்ளன  . அதிமுக அறிவித்திருப்பது 15 . மீதமுள்ள 6 வார்டுகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வாய்ப்பு.

 

உத்தரமேரூர் ஒன்றியம் வார்டு எண்ணிக்கை 22 . அதிமுக அறிவித்திருப்பது 17. 5 கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வாய்ப்பு 

 

ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியம் 16 வார்டுகள் உள்ளன . அதிமுக அறிவித்திருப்பது 12. 4 கூட்டணிக்கு ஒதுக்க வாய்ப்பு .

 

குன்றத்தூர் ஒன்றியம் 21 வார்டுகள் உள்ளன .அதிமுக அறிவித்திருப்பது 18. 3 கூட்டணிக்கு ஒதுக்க வாய்ப்பு .

 

காஞ்சிபுரம் வெற்றி யாருக்கு...?


 



 

செங்கல்பட்டு 

 

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சியில் 16  வார்டுகள் உள்ளன. 14 இடங்களுக்கு அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இரண்டு வார்டுகள் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களுக்கு அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.