கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட புனித வளனார் பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டிருந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் தொடங்கிய நிலையில், புனித வளனார் பள்ளியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறையின் சாவி தொலைந்துள்ளது. அந்த அறையின் சாவி தொலைந்ததால் ஸ்ட்ராங் ரூம் திறக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஸ்ட்ராங் ரூம் திறக்கப்படாமல் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சாவியை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
Cuddalore corporation Results 2022: கடலூர்: தாமதமாகும் வாக்கு எண்ணிக்கை! சாவியை தொலைத்துவிட்டு தெருவில் காத்திருக்கும் அதிகாரிகள்!
சுகுமாறன் Updated at: 22 Feb 2022 09:26 AM (IST)
Cuddalore corporation Results 2022: கடலூர் புனித வளானர் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாவி காணாமல் போனதால் திறக்கப்படாத வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறை