வேலூர் ஆசிரியர் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி இதழின் மாவட்ட பொறுப்பாளர்களின் மண்டல ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், " தமிழகத்தில் இரண்டு அணிகள் தான் உள்ளது. அது திமுக மற்றொன்று அதிமுக. அதில் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு உள்ளது. இதில் திமுக அணி என்பது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் இந்த அணிதான் மகத்தான வெற்றி பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே திமுக கட்சி தலைவர் கூட்டணியில் உள்ள அனைத்து தோழமை கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசி கூட்டனி தர்மத்தின் அடிப்படையில்


 




 


இந்த ஈரோடு தொகுதியை காங்கிரஸ்க்கு விட்டு கொடுப்பது எனவும், மீண்டும் அங்கு காங்கிரஸ் கட்சியே போட்டியிட வாய்பை உருவாக்க வேண்டும் என முடிவு செய்து காங்கிரஸிக்கே வழங்கப்பட்டது. கூட்டணி தர்மம் அங்கு காப்பற்ற பட்டது. காங்கிரஸ் கட்சியும் தனது வேட்பாளர் பெரியாரின் பேரன் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார். குடியரசு தினத்தன்று ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிக்கிறது. தேநீர் விருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று முறையாக அழைப்பு விடுத்தார் ஆளுநர். ஆனால் அந்த விருந்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்க போவதில்லை. ஏன் என்றால், ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக செயல்படவில்லை ஆர்.எஸ்.எஸ். தலைவராக செயல்படுகிறார் என்பதால் தேநீர் விருந்தை நிராகரிக்கிறோம். தமிழ்நாட்டில் இரண்டு கூட்டணி கட்சிகள் மட்டுமே தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்


 




 கட்சிகள் ஒன்று திமுக கூட்டணி மற்றொன்று அதிமுக கூட்டணி. இதில், அதிமுக பிளவு பட்டுபோய்விட்டது. அதிமுக'வின் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆளுக்கு ஒரு இலையாக பிழித்து எடுத்துக் கொண்டார்கள். அவர்களுக்குள் கடும் மோதல் உருவாவதற்கு முக்கிய காரணகர்தாவே பி.ஜே.பி தான். அதை அதிமுக கட்சிகாரர்கள் உணர்ந்தார்களோ இல்லையோ தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து விட்டார்கள். ஈரோடு மக்களும் உணர்ந்து விட்டார்கள்.  அதிமுக'வை பிளவுப் படுத்தி, பி.ஜே.பி தமிழ்நாட்டில் பெரிய கட்சியாக வளர்வதாக நினைத்துகொண்டு இவைகளை எல்லாம் செய்து வருகிறது. இதை அதிமுக'வினர் புரிந்துகொள்ள வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் பேட்டியிட திரானி இல்லாமல் பி.ஜே.பி ஒலிந்து கொண்டு இருக்கிறது" என்றார்.


மேலும் அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி என்றும் அவர் நல்ல முடிவை எடுத்து இருப்பதாகவும் முத்தரசன் கூறினார்."