விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள் ளார்.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு இன்று 59ஆவது பிறந்தநாள். இதையொட்டி, அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் அவருக்கு வாழ்த்துகளை கூறிவருகின்றனர். இதேபோல், பிறகட்சித் தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.


 






இந்த நிலையில், திராவிட சிறுத்தை திருமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதலச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில், “திராவிடச் சிறுத்தை சகோதரர் 
திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் பயன் தர வேண்டுமென வாழ்த்துகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.






 


 


இதனைத்தொடர்ந்து, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். ‘தமிழ்ச் சமூகத்திற்கு வாய்த்த தன்னிகரற்ற அரசியல் ஆளுமை, என் அன்புச் சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீடூழி வாழ்க!’ என தனது வாழ்த்து செய்தியில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.


 






நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘விளிம்பு நிலை மக்களின் குரலாய் ஒலிக்கும் சமரர்! தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புக்களங்களில் கருத்தியலாகவும், களப்பணிகள் வாயிலாகவும் அயராது பங்காற்றி வரும் அரசியல் பேராளுமை! அன்பிற்கினிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!' எனப் பதிவிட்டுள்ளார்.


 


அர்ச்சகர் நியமன விவகாரத்தில் சமூகநீதியை பாழ்படுத்த விஷம பிரச்சாரம் - முதல்வர் ஸ்டாலின்