பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே பாஜக கொடி பறக்கவிடுவதற்காக புதியதாக அமைத்த கொடி கம்பம் அகற்ற வலியுறுத்தி அப்பகுதிமக்கள் , கொடி கம்பத்தை அகற்ற விடமாட்டோம் என பாஜகவினரும் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே


சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே பாஜக கொடி பறக்க விடுவதற்காக புதிய கொடி கம்பம் அமைத்ததற்கு அங்குள்ள  மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன், காவல் உதவி ஆணையாளர், ஆய்வாளர், பெண் காவலர்கள் உள்ளிட்ட சுமார் 150 க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

 

கொடி கம்பத்தை கட்டிப்பிடித்தபடி போராட்டத்தில் 

 

காவல்துறைக்கும் பாஜகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மாநில துணை தலைவர் கரு நாகராஜன் போலீசாரிடமும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதில் சென்னை மாநகராட்சி உத்தரவின் பேரில் போலீசாரின் பாதுகாப்புடன் அமைத்த பாஜக கொடி கம்பத்தை அகற்ற முற்பட்டபோது அதற்கு எதிராக கோஷமிட்டு கொடி கம்பத்தை கட்டிப்பிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாஜகவினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சுமார் 70க்கும் மேற்பட்டோர் சாலை ஓரத்தில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட முயன்ற அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்கள் சாலை மறியலில் ஈடுபடாதவாறு  பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டனர். 

 

ECR சாலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

 

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் இரவு சுமார் 11 மணி அளவில்  இருதரப்பினருக்கும் இடையே கலவரம் ஏற்படும் அபாயத்தில் உள்ள நிலையில் போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முடியாமல் தவித்தனர். பாஜகவினர் உள்ள பகுதிக்கு வராமல் இருக்க கிழக்கு கடற்கரை சாலை நடுவே தடுப்புகள் அமைத்து அகற்ற முற்பட்டபோது போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால்  ECR சாலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி சென்று தனியார் திருமண மண்டபத்தில், அடைத்த நீலாங்கரை மண்டல தலைவர் மாரிமுத்து என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .