அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் ஜூலை 4ம் தேதி பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனு தாக்கல்
திண்டுக்கல் சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், அந்த மனுவில் அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் இருந்த அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவியை கலைத்துவிட்டு, இரட்டை தலைமையை உருவாக்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பதிலளிக்க உத்தரவு:
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி தாமோதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் வரும் ஜூலை 4-ந் தேதி பதிலளிக்க உத்தரவிட்டார்.