செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த கீதா கார்த்திகேயன் இருந்து வருகிறார். மதுராந்தகம் ஒன்றியத்தில் திமுக அதிக அளவு இடங்களை கைப்பற்றி இருந்தாலும், உட்கட்சிப் பூசல் காரணமாக, ஒன்றிய தலைவர் பதவியை அதிமுக லாவகமாக கைப்பற்றியது. இதனையடுத்து அதிமுகவை சேர்ந்த கீதா கார்த்திகேயன் ஒன்றிய குழு தலைவராக பதவி வகித்து வருகிறார்.




இந்நிலையில் மதுராந்தகத்தில் இன்று ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 8ஆவது வார்டு  கவுன்சிலராக உள்ள ஒப்பிலா என்பவரின் தந்தையும் திமுக மதுராந்தக வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ள சத்தியகோபால் மற்றும் 12ஆவது வார்டு கவுன்சிலராக உள்ள பாலாவின் தந்தையும்  திமுகவின் மதுராந்தக வடக்கு ஒன்றிய பொருளாளர் ரோக் சகாயராஜ் ஆகியோர் இக்கூட்டத்தில் கந்து கொண்டதற்கு அதிமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 






இந்த நிலையில் நாங்கள் கலந்து கொள்வோம் என திமுகவை சேர்ந்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அதிமுக கவுன்சிலர்கள் அவர்களை வெளியேற்ற தொடர்ந்து கூச்சலிட்டனர். கவுன்சிலர்களின் உறவினர்கள் கணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கூடாது என அதிமுகவினர் தொடர்ந்து வற்புறுத்தியதால் இதனால் சலசலப்பு ஏற்பட்டது.



முன்னதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் ஊராட்சி பிரதிநிதிகளின் உறவினர்கள் என கூறிக்கொண்டு யாரும் ஊராட்சி பிரதிநிதிகளின் பதவியில் தலையீடு இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண