தமிழ்நாட்டின் அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறையானது, அமைச்சர் பொன்முடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடிக்கு கூடுதலாக காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக மட்டும் தொடர்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, ஆளுநர் மாளிகை தரப்பு தெரிவித்ததாவது , “ தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனிடம் இருக்கும் காதி மற்றும் தொழில்துறையை , வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடியிடம் ஒதுக்கப்படுவதாக ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.