பிரதமர் மோடியை டெல்லியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசியுள்ளார். தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் மீண்டும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.


ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கும் புதிய கல்வி கொள்கைக்கும் தமிழ்நாட்டில் திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசியல் சூழல் தொடர்பாகவும் பிரதமர் மோடியிடம் ஆளுநர் ரவி எடுத்துரைத்தூள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


வெளிநாட்டில் இருந்து திரும்பிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன்னர் சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது, பல்லாவரத்தில் குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரம் உள்ளிட்ட சில முக்கிய பிரச்னைகளை அவர் எடுத்துக் கூறியது குறிப்பிடத்தக்கது