அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட மாணவரணி சார்பில் மொழி போர் தியாகிகளின் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் விழுப்புரம் மந்தகரை திடலில் நடைப்பெற்றது. விழுப்புரம் மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைப்பெறும் இக்கூட்டத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்துக்கொண்டு மொழி போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி சிறப்புரையாற்றினார் .


அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசியதாவது :-


தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு இருப்பதற்கு மொழி போர் தியாகிகள் தான் என்றும் இந்தியை திணிக்கின்ற நோக்கத்தில் தான் மத்திய அரசுக்கு வருகிறவர்கள் முயற்சித்து வருவதாகவும், இந்தியை திராவிட இயக்கங்களால் தடுக்கப்பட்டு வருவதாகவும், மொழிக்காக தீக்குளித்த இனம் நமது தமிழ் இனம் மட்டும் தான் என்றார் .


ஆனால் பதவி ஆசைக்காக தேசியம் என்ற பெயரில் இந்தியை தினிக்க முயற்சிகிறார்கள், இந்தியை திணிப்பதில் காங்கிரஸ் , பிஜேபி இரண்டும் ஒன்று தான், தமிழை வைத்து வியாபாரம் செய்துக்கொண்டு, செய்த ஊழலை மறைக்க, தமிழை காட்டிக்கொடுத்தவர் கருணாநிதி என்று கடிமையாக விமர்சித்தார். இந்தி வெறியர்கள் தான் ஆண்டு கொண்டு இருப்பதாக்வும்,  இந்தியை கொண்டு வருவதே நோக்கமாக மத்தியிலும் ஆளும் அரசுக்கு உள்ளதாகவும், தமிழகம் மட்டும் தான் இந்தியை எதிர்க்கிறது என்றார்.


தமிழுக்காக பாடுப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் திமுக வியாபாரத்திற்காக எதையும் செய்ய கூடியவகள் திமுக வினர் என்றும், திராவிட மாடல் பற்றி உச்சநீதிமன்றம் சவுக்கால் அடிக்கிற அளவில் கேள்வி எழுப்பியுள்ளது என்றார். உச்சநீதிமன்றம் மாநில மொழிகளில் தீர்ப்புகள் வெளியிடப்படும் என்று கூறியதற்கு எடப்பாடியார் முதல்வராக இருந்த போது ஏற்ப்படுத்தப்பட்டவை என்றும் தெளிவுப்படுத்தினார்.


இந்தியை கொள்ளை புறமாக கொண்டு வருவதற்காக தான் மத்திய அரசு பள்ளி கொண்டு வரப்பட்டு வருவதாகவுன், இந்தியை பயிற்றுவிக்கிற பள்ளியை அனுமதிக்க முடியாது என அதிமுக தீர்க்கமாக இருந்ததாகவுன் தெரிவித்துக்கொண்டார். தமிழகத்தில் 24 மணி நேரமும் ஒரு அமைச்சர் சாராயம் விற்கிறார் , ஏன் தமிழக அரசேகஞ்சா விற்பதாகவும் குற்றம சாட்டி பேசுய சி.வி.சண்முகம், மாணவர் சமுதாயம் சீரழிந்து வருவதாகவும், இதையெல்லாம் கேட்க வேண்டிய திமுக அரசு குடும்பத்தை கட்டி காத்துக்கொண்டு வருவதாகவும் விமர்சித்தார்.


அதிமுக வை அழித்து விடுவோம் என திராவிட மாடலில் உதித்துள்ள உதயநிதிக்கு வரலாறு ஏதேனும் தெரியுமா, தன்மானத்தை பற்றி பேச உதயநிதிக்கு என்ன அருகதை உள்ளது என்றார். மத்திய ஆட்சியில் தொடர வேண்டும்,கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் யிடம் மண்டியிட்டது, தன்மானம் என்பது உதயநிதி குடும்பத்திற்கே கிடையாது.


நீட் தேர்வுக்கான சட்டம் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பிய அவர், மக்கள் மீது எந்த அக்கறையும் இந்த அரசுக்கு இல்லை என்றார். திமுக வினர் கூட அமைச்சர்களை கேள்வி கேட்கும் நிலை உருவாகியுள்ளதாகவும்,  அனைத்து தரப்பு மக்களை எதிர்ப்பை இந்த திமுக அரசு சம்பாதித்துள்ளதாகவும், இந்த ஆட்சிக்கு எதிரி திமுக வினர் தான் என்றார்.


தமிழ் வளர்ச்சி என்று சொல்லிக்கொள்ளும் இந்த திமுக அரசு என்ன செய்தது என்றும், இந்த ஆட்சியில் எந்த பணிகளும் நடைப்பெறவில்லை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுக்காப்பு இல்லை, சாத்தான் குளத்தில் காவல் நிலைய மரணம் குற்றவாளிகளை தண்டித்தது எடப்பாடியார் அரசு. சாத்தான்குளன் கொலையை விட திருவள்ளுவரரில் சீர் திருத்த பள்ளியில் 17 வயது சிறுவனை காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளனர், யாரேனும் கேள்வி கேட்டார்களா என்று பகிரங்கமாக கேள்வி எழுப்பிய சி.வி.சண்முகம்,


நீதிமன்றம் தலையீட்டு நீதிபதிகள் ஆவணங்களை சரி பார்த்து கொலை வழக்காக மாற்றப்பட்டதாகவும், சிறுவன் கொலை குறித்தி இந்த அரசும் முதல்வரும் ஏன் வாயே திறக்கவில்லை, இது தான் திராவிட மாடலா  என்றார். இது தமிழ் விரோத அரசு என்றும், தமிழிக்கு எதிரான அரசு என்றும் மக்கள் விரோத அரசை தூக்கி எறியப்பட வேண்டும், வீட்டிற்கு அனுப்ப வேண்டும் மக்கள் எதிர்ப்பை சம்பாதித்த அரசு சொன்னதை எதையும் செய்யாத அரசு அம்மா அரசு கொண்டு வந்த திட்டங்களை முடக்கிய அரசு இதை தூக்கி எறிய வேண்டும் இடைத்தேர்தலுக்கு பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்றார்.


வேலை வாய்ப்பு இல்லை,அரசு சார்பில் 12 லட்சம் வேலை வாய்ப்பு காலியாக உள்ளது அவற்றை ரத்து செய்ய பார்க்கிறது. மக்களோடு மக்களாக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குரல் கொடுகிற தலைவர் பச்சை தமிழன் எடப்பாடியார் திமுக ஆட்சியை தூக்கி எறிந்து நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என சி.வி.சண்முகம் பேசினார்.