சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறியதாவது: தமிழ்நாடு, கர்நாடகா இரண்டு மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் பகிர்வு இந்த பிரச்சனையில் திராவிட முன்னேற்ற கழகம் அதிக அளவில் அரசியல் செய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை காவிரி ஆற்றில் பாஜக எந்த அரசிலும் இதுவரை செய்யவில்லை. ஆண்டாண்டு காலமாக தமிழ்நாடு, கர்நாடகாவுக்கு காவிரி பிரச்சனை இருந்து வருகிறது. அதற்கான நிரந்தர தீர்வு பிரதமர் நரேந்திர மோடி காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைத்து தீர்த்து வைத்தார்.
மேகதாதுவில் அணை கட்ட
காவிரியில் மேகதாது அணை கட்டுவேன் என இல்லாத ஒரு பிரச்சினையை கர்நாடகா தான் கிளப்பி விட்டது. அதனை தமிழக பாஜக ஆக்ரோஷமாக கண்டித்த பிறகு இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் இரண்டு மத்திய அமைச்சர்கள் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றில் டேம் கட்ட முடியாத என தெரிவித்துள்ளனர். இதனை மீண்டும் ஆரம்பித்துள்ளது காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் தேர்தல் வாக்குறுதியின் போது நாங்கள் மேகதாதுவில் அணை கட்ட போகிறோம் அதனால் நிதியும் ஒதுக்கப் போகிறோம் என கூறினார்கள். அப்போது நான் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் இருந்தபோது அதனை கண்டித்தேன். ஆனால் இதுகுறித்து தமிழக அரசியல் கட்சிகள் எதுவும் வாய்த்திறக்கவில்லை. தற்போது இந்த ஆண்டு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது எனவும் கூறியுள்ளனர் காவிரி தண்ணீரால் லட்சக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரம் அடைந்து வருகின்றனர். காவிரி நதிநீரை நிறுத்திவிட்டால் மிகப்பெரிய கஷ்டத்திற்கு தமிழகம் சென்று விடும்.
அனைத்து எதிர்க்கட்சி கூட்டம்
அகில இந்திய அளவில் தலைவராக வருவதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து எதிர்க்கட்சிக் கூட்டத்திற்ககு சென்றால் நம்மளை ஏற்றுக் கொள்வார்கள் என ஸ்டாலின் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் கர்நாடகா காவிரி ஆற்று பிரச்சனை குறித்து அம்மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரை கண்டிப்பதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை, காங்கிரஸ் கட்சியை கண்டிப்பதற்கும் மனமில்லை. ஆனால் பெங்களூருவில் அனைத்து எதிர்க்கட்சி கூட்டத்திற்கு மட்டும் ஸ்டாலின் எப்படி செல்ல முடியும் தமிழ்நாட்டின் தன்மானத்தை தாரைவார்த்து விட்டு செல்வாரா என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, இதே போல் முல்லைப் பெரியாறு அணையிலும் இரண்டு பிரச்சனைகள் ஏற்பட்டது முல்லைப் பெரியாறு டேமில் அனுமதி இல்லாமல் ஷட்டர் திறக்கப்பட்டு தண்ணீர் விடப்பட்டது. ஷட்டர் உடைந்து நான்கு நாட்களாக தண்ணீர் வெளியேறியது ஸ்டாலின் முதல்வராக வந்த பின்பு தான் முதல்முறையாக முல்லைப் பெரியாறு அணையிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனை எதுவும் கவனிக்காமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் பெங்களூரில் நடக்கும் எதிர்க்கட்சிக் கூட்டத்திற்கு சென்று வந்தால் ஸ்டாலினை கண்டித்து ஒவ்வொரு பாஜக தமிழக பாஜகவினரும், விவசாயிகளும் கோ பேக் ஸ்டாலின் என வீட்டின் முன்பு பதாகைகளை வைப்போம். விமான நிலையத்திற்கு வெளியே வீதியில் நின்று தன்னையும் உட்பட அனைவரும் கருப்பு பலூன் பறக்க விடுவோம்.
முதல்வர் ஸ்டாலின் கர்நாடக அரசை கண்டிக்க வேண்டும். கர்நாடகா முதல்வர் சித்தராமையா துணை முதல்வர் டி கே சிவகுமார் இதை முக்கிய வேலையாக கொண்டு செய்து வருகிறார்கள். அவரை கண்டிக்காமல் அரசியல் செய்வதற்கு ஏன் இத்தனை காங்கிரஸ் எம்பிகள் தமிழகத்தில் இருக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினார். தாங்கள் ராஜசபா எம்பியாக உள்ள மத்திய அமைச்சர் எல்.முருகனை வைத்துக்கொண்டு தமிழகத்தின் அனுமதி இல்லாமல் முகத்துவில் டேம் கட்ட முடியாது என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளோம். இதை எதையும் நீங்கள் செய்யாமல் தமிழக பாஜக அரசியல் செய்கிறது அண்ணாமலை அரசியல் செய்கிறார் என முதல்வர் ஸ்டாலினும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரியும் கூறி வருகிறார்கள். இதை எப்படி ஏற்றுக் கொள்வது. மத்திய அரசு தெளிவாக சொல்லியுள்ளது தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதவில் டேம் கட்ட முடியாது,
கர்நாடகா காவிரி ஆறு பிரச்னை போலவே முல்லைப் பெரியாறு அணைகளிலும் நமது உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டு வருகிறது. டெல்லியை பொறுத்தவரை தமிழகத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர். பிரச்சனை இருப்பது கர்நாடகாவில் தான் இதனை நீங்கள் சரி செய்யாமல் அனைத்து எதிர்கட்சிக் கூட்டத்திற்கு மட்டும் பெங்களூர் செல்வது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். கடந்த 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் திமுக ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்துயிட்டனர். அதேபோல் காவிரி நதிநீரை நிறுத்திவிடுவோம் என கர்நாடகா கூறி வருகிறது. அதற்கும் ஆதரவாக திமுகவினர் அமைதியாக இருக்கின்றனர். அவர்களுக்கு கண்டிப்பாக வரும் தேர்தலில் இரு கட்சிகளுக்கும், மக்கள் விரோதம் செய்வார்கள், பெரும் எதிரொலியாக நிச்சயம் இது இருக்கும்.
இரண்டு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருந்தால்
பாஜக ஆட்சி அமைக்கும் மாநிலங்களில் பிரச்சனையே இல்லை. இரண்டு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருந்தால் பேசி பிரச்சினையை முடித்துக் கொள்வார்கள். இந்தியா முழுவதும் பாஜக அனைத்து மாநிலங்களையும் ஆட்சிக்கு வர வேண்டும் என மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். என்னை திட்டுவதற்கு பதில் தமிழகத்தில் உள்ள எம்பிக்கள் அனைவரும் விமானம் பிடித்து பெங்களூர் செல்வதற்கு எவ்ளோ நேரம் ஆகும். இதில் இரண்டு எம்பிக்கள் நிரந்தரமாக பெங்களூரில் தான் இருக்கிறார்கள் இவர்கள் எதையும் செய்யாமல் தமிழக பாஜக அரசியல் செய்கிறது என குறை கூறி வருகிறார்கள். பாஜகவை பொறுத்தவரை முழுமையாக ஊழலை ஒழிக்க கூடிய கட்சி மகாராஷ்டிராவில் மத்திய அரசின் புலனாய்வு அதிகரிகள் தனது பணியை சுதந்திரமாக செய்கிறார்கள். அங்கு எந்த குழப்பமும் இப்போது தேவையில்லை என்பது எனது கருத்து என தெரிவித்தார்.