காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரை நாளை சந்தித்து பேசுவேன். டெல்லியில் காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளேன். எந்த காரணத்தைக் கொண்டும் மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது சட்டப்படியும் அது முடியாது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  பேட்டி

 

அமைச்சர் துரைமுருகன்  பேட்டி


 

சென்னை (Kanchipuram News): டென்மார்க்கிற்கு அரசு முறை பயணமாக சென்று விட்டு திரும்பிய தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- 

 

நீர்வளத் துறையில் எப்படி சிக்கனத்தை பயன்படுத்துவது, நீர்வளத் துறையில் நீரை எப்படி பாதுகாப்பது உலகத்திலேயே முன்னோடி திட்டமாக இருப்பது டென்மார்க். டென்மார்க் போல் தமிழகத்தில் நீர்வளத்தை சீரமைக்க வேண்டும் என்ற எண்ணம். இதுகுறித்து டென்மார்க் அரசிடம் பேச விரும்பினோம். டென்மார்க் நீர்வளத்துறை அமைச்சரிடம் தமிழகத்தின் நிலைமை எடுத்து கூறினோம். கனிவாக கேட்டனர். ஒரு வார காலத்தில் டென்மார்க் அதிகாரிகள் சென்னை வர உள்ளனர். தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடம் பேசி பின்னர் திட்டம் வகுக்கப்படும் என்ற உறுதியுடன் உள்ளோம். டென்மார்க் பயணம் பயனுள்ளதாக இருந்தது. ஆறுகளில் எங்கு பார்த்தாலும் தாமரைகள் பரந்து விரிந்து கிடக்கிறது அதை கூட டென்மார்க்கில் எடுத்து எருவாக்கி உள்ளனர். அந்த திட்டம் குறித்து தெரிவித்தனர். ஒரு வாரத்தில் டென்மார்க் நிபுணர் குழு வர உள்ளது.

 

நானே டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை 

 

காவிரி நிர்வாகத்தை காவிரி மேலாண்மை வாரியம் என்ற அமைப்பிடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்து உள்ளது. வழக்கு தீர்ந்து இதுதான் முடிவு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருக்கக்கூடிய நீர்நிலைமை என்ன என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் தமிழக அரசு கர்நாடக அரசிடம் பேச முடியாது, பேசினாலும் அது சட்டப்படி தப்பு. அது முடிந்து போன விவகாரம். தமிழ்நாடு கவனிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் ஒரு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரை காலையில் சந்திக்க உள்ளேன். நானே டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளேன். எந்த காரணத்தைக் கொண்டும் மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது.  சட்டப்படியும் அது முடியாது, வேண்டுமென்றால் அவர்கள் அணைகட்டி விடுவோம் என்று பேசிக்கொண்டு இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் கர்நாடகாவின் அரசியல் ஸ்டண்ட் அவர்களால் ஒன்றும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது.

 

பாதகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது

 

கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இரண்டுமே அண்டை மாநிலங்கள். ஏராளமான தமிழர்கள் கர்நாடகாவில் வசிக்கின்றனர்.  ஏராளமான கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் நல்ல நிலைமையில் உள்ளனர். ஆகவே இவை எல்லாம் பாதகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது தான் இரண்டு அரசுகளின் பொறுப்பு. தமிழ்நாடு அரசு உணர்கிறது. உள்ளபடியே அவர்களும் உணர்வார்கள் என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

 













ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.



Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர