கடந்த வெள்ளிக்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் மொத்தம் 6 நாட்கள் அலுவல்கள் நடைபெற்றன. இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு நேற்று ஒத்திவைத்தார்.


அதனை அடுத்து, தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மக்களை ஏமாற்றிவிட்டதாக கூறி பாஜக கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், நீட் தேர்வு தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு நிறுத்தியுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.



முன்னதாக, தேர்தல் அறிக்கையில் மகளிர்க்கு 1000 ரூபாய் கொடுப்போம், கேஸ் விலையை குறைப்போம் என்று கூறிய திமுக அரசு, தற்போது ஏற்கனவே இருந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு தற்போது அரசு கல்லூரி மாணவிகளுக்கு 1000ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்., ஆனால் அதில் எந்த தவறு கிடையாது ஏற்கனவே குடும்பத் தலைவிக்கு அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாயை கூட கொடுக்க முடியவில்லை.  இதில் 36 மாதங்களுக்கு தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் 5 லட்சம் மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்க முடியுமா.?  தாலிக்கு தங்கத்தை நிறுத்திவிட்டு வேறு திட்டத்திற்கு நிதியை மாற்றி கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். இவர்கள் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது இரண்டு திட்டத்தையும் குழப்புகிறார்கள் என அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார்.


வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் போராட்டம்:



இந்நிலையில், வரும் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், “மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக ஏப்ரல் 6ஆம் தேதி முதல் மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. விவாதத்தின்போது அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் இருக்கும். தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி வரும் 30ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்” என்று கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண