மறைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ துரை கோவிந்தராஜன் உடலுக்கு மரியாதை செலுத்த தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அதிமுக ஜனநாயக ரீதியில் செயல்பட வேண்டும். மேலும் வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்ட விதிகளுக்கு ஒரு சின்ன மாசு ,பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதே இப்போதே தர்மயுத்தம். அதிமுகவில் தொண்டர்கள் இடையே ஒற்றுமையுள்ளது. ஆனால் தலைமையில்தான் பிரச்சனை உள்ளது என்ற மாயத்தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.
அதிமுகவில் பிளவு ஏற்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடிக்க பாஜக திட்டமிடுவதாக வரும் செய்திகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிமுகவையோ அதன் தொண்டர்களையோ யாரும் பிளவு படுத்தி பார்க்க முடியாது. அதிமுகவை யாரும் மிரட்டவும் முடியாது. அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் டிடிவி தினகரன் , திமுகவை வீழ்த்த , பிளவுபட்டு இருக்கும் அதிமுக ஒரே கூட்டணியில் சேர வேண்டும் என்று கூறிய கருத்து நல்ல கருத்து. அதனை நான் வரவேற்கிறேன். தஞ்சாவூரில் வாய்ப்பு இருந்தால் அவரை நேரில் சந்தித்து பேசுவேன். திமுகவும் - அதிமுகவும் அண்ணன் - தம்பிகள் தான் ஆனால் இருவரும் மாற்றுபாதையில் பயணக்கிறோம்” என்று கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்